’விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் இதுதான்’ : உண்மையை உடைத்த ரம்யா..

Mr & Mrs நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணத்தை ரம்யா வெளிப்படுத்தியுள்ளார்.

’விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் இதுதான்’ : உண்மையை உடைத்த ரம்யா..
ரம்யா - சத்யா ஜோடி
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 1:28 PM IST
  • Share this:
விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து பங்கேற்காததற்கான காரணத்தை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் பாடகியுமான ரம்யா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். அதில் அவர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் வைக்கப்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளரும் பாடகியுமான ரம்யா அவரது கணவருடன் பங்கேற்று வந்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு வாரங்களாக இந்த ஜோடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் Mr & Mrs நிகழ்ச்சியின் அரை இறுதியிலும் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.இதுகுறித்து ரம்யா கூறும்போது, ”இந்நிகழ்ச்சியின் இரண்டு சுற்றுகளைத் தான் தாண்டுவோம் என நினைத்திருந்தோம். இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வைரஸ் காய்ச்சல் இருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நலமடைந்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading