• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் சீசன் -5ல் என்ட்ரி கொடுக்கப்போகும் அடுத்த பாடிபில்டர்?

பிக்பாஸ் சீசன் -5ல் என்ட்ரி கொடுக்கப்போகும் அடுத்த பாடிபில்டர்?

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் கமல்

கடந்த 4 சீசன்களாக கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

  • Share this:
    ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன டிவி என்றால் அது விஜய் டிவி தான். சூப்பர் சிங்கர் முதல் காமெடி, கேம் ஷோ வரை இவர்களின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளை தவிர மக்கள் அனைவருக்கும் பிடித்தமான மற்றொரு ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி டிஆர்பி-யில் எப்போதுமே முதலிடத்தை பிடிக்கும். மேலும் கடந்த 4 சீசன்களாக கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

    ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியானாலும் இப்போது வரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுவரும் ஒரே ஷோவாக உள்ளது. இந்த நிலையில் 5வது சீசன் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த முறை பிக் பாஸ் லோகோ பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது.

    அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. ஆனால் இந்த பட்டியல் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் சீசன் 5-ல் சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கோபிநாத் ரவி என்ற மாடல் பிக்பாஸில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் ஒரு பாடி பில்டர் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த சீசனிலும் ஒரு பாடி பில்டரா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.



    Imadh என்ற ட்விட்டர் யூசர் வெளியிட்ட பதிவில், "கோபிநாத் ரவி பிக்பாஸ் தமிழ் சீசன்-5 ல் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கேப்ஷன் செய்துள்ளார். மேலும், இந்த சீசன்லையும் ஒரு பாடிபில்டரா? யாரா இருக்கும்? விடை நாளை காலை என்று பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலங்கள் யார் யார் என்று விரைவில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: