• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Pavithra Lakshmi: குக் வித் கோமாளியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் யார் தெரியுமா?

Pavithra Lakshmi: குக் வித் கோமாளியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் யார் தெரியுமா?

பவித்ரா லக்‌ஷ்மி

பவித்ரா லக்‌ஷ்மி

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தான் அழைத்து வந்த இளைஞர் யார் என்பது குறித்து, பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தான் அழைத்து வந்த இளைஞர் யார் என்பது குறித்து, பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நகைச்சுவை சமையல் என இரண்டையும் மையப்படுத்திய இந்நிகழ்ச்சி, விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

    தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். இந்நிலையில் கடந்தவாரம் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷாகிலா மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும், இறுதிப் போட்டியில் நுழைந்தனர்.




    இதையடுத்து இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ‘ப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி’ ரவுண்ட் நடைப்பெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும், தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் பவித்ரா லட்சுமி ஒரு இளைஞருடன் கலந்துக் கொண்ட ப்ரோமோ ஏற்கனவே வெளியானது. அவர் யார் என குக் வித் கோமாளி ரசிகர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதற்கான விடையை பவித்ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”குக் வித் கோமாளியில் “நண்பர்கள் மற்றும் குடும்ப சுற்று" இது. துரதிர்ஷ்டவசமாக என் குடும்பம் சென்னையில் இல்லை, எனக்கு ஆதரவளித்து, என்னை ஆதரித்தவர் யார் என்று பாருங்கள்! சுதர்ஷன் கோவிந்த் நன்றி மா, இது உண்மையில் பெரிய விஷயம். என்னுடையெ ஃபேவரிட் அகில உலக சூப்பர் ஸ்டார். சமைக்க தெரிஞ்ச ஒரே ஃப்ரெண்ட் நீங்க தான். எல்லோருக்கும் உங்களைப் போன்ற ஒரு நண்பர் தேவை” என குக் வித் கோமாளி செட்டில் எடுத்துக் கொண்ட படங்களுடன் இதனைப் பதிவிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: