பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்!

news18
Updated: July 20, 2019, 5:27 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்
news18
Updated: July 20, 2019, 5:27 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்தவாரம் வெளியேற்றப்பட உள்ள போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி தற்போது 25 நாட்களைக் கடந்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு. அவரைத் தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமாரும் வெளியேற்றப்பட்டார்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில், மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், ஷெரின் அபிராமி ஆகியோர் உள்ளனர்.


இந்தப் பட்டியலில் நடிகை மீரா மிதுன் சக போட்டியாளர்களிடையே குழப்பத்தையும், பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தி வருவதால், அவருக்கு குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மோகன் வைத்யாவும் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்றுப்படியும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.Loading...

வீடியோ பார்க்க: ATM-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...