அர்ச்சனா மீண்டும் சின்னத்திரையில் எப்போது? மகள் சாரா கொடுத்த அப்டேட்

வி.ஜே.அர்ச்சனா,

தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வரும்நிலையில், அவர் தொலைக்காட்சிகளில் மீண்டும் எப்போது வருவார் என்ற அப்டேட்டை மகள் சாரா யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்.

  • Share this:
பிரபல தொகுப்பாளியான வி.ஜே அர்சன்னாவுக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், தனக்கு மூளையில் சிறிய பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக விரைவில் ஆப்ரேஷன் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய ஹெல்த் அப்டேட் குறித்து மகள் சாரா தொடர்ந்து சமூகவலைதங்களில் கொடுப்பார் எனவும் அர்ச்சனா கூறினார். அவர் கூறியதுபோலவே அர்ச்சனாவின் ஹெல்த் அப்டேட் குறித்து மகள் சாரா தெரிவித்து வந்தார்.

அதன்படி, அர்ச்சனாவுக்கு மூளை ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆப்ரேஷன்போது நினைவு தப்பியிருந்த அவர் மீண்டும் நினைவுக்கு திரும்பி நார்மலாக இருக்கிறார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுதியுள்ளனர். அம்மா அர்ச்சானவின் அப்ரேஷன் குறித்து வீடியோ வெளியிட்ட சாரா, எல்லோரின் அன்புடன் வெற்றிகரமாக அம்மாவின் ஆப்ரேஷன் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார்.

Also Read : நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது - விஷால் ட்வீட்

இதற்கு அனைவருக்கும் நன்றியையும் சாரா தெரிவித்துக்கொண்டார். இதனிடையே, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் இருந்த அர்ச்சனா தற்போது, வீல் சேரில் அமர்ந்தபடி வீட்டிற்கு திரும்பியுள்ளார். தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் இந்த சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

உடல்நலக் குறைவு இருந்தாலும், சன்னமான குரலில் அவரே தன்னுடைய நிலை குறித்து வீடியோவில் பதிவு செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கம்பீரமாக, மிகவும் சத்தமாக பேசும் அர்ச்சனா மிகவும் சன்னமான குரலில் பேசுவதை பார்த்து ரசிகர்களே வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில், அவர் எப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளார் என்பதை மகள் சாரா இப்போது தெரிவித்துள்ளார்.

Also Read : 4 அல்ல... 40 திருமணம் கூட செய்துகொள்வேன்: வனிதா விஜயகுமார்

அந்த வீடியோவில், வீட்டிற்கு திரும்பியுள்ள அம்மா, மிகவும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் உடல்நிலை இன்னும் ஒரு மாதத்தில் தேறிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சாரா, அதன்பிறகு வழக்கம்போல் தொலைக்காட்சி பணிகளுக்கு திரும்பிவிடுவார் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அர்ச்சனாவுக்கு சமூகவலைதளங்களைப் பொறுத்தவரையில் ரசிகர்களுக்கு இணையாக ஹேட்டர்ஸ் அதிகளவு இருக்கின்றனர்.

ஆனால், அவரின் இந்த நிலையைப் பார்த்து வருத்தமடைந்துள்ள அவர்களும், விரைவில் நலம் பெற்று பழைய அர்ச்சனாவாக களத்துக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சன்டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான வி.ஜே. அர்ச்சனா, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தொலைக்காட்சியில் முக்கிய நிகழச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் விரிவடைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: