மாற்றுத்திறனாளி கௌசல்யாவிடம் கேட்கப்பட்ட அந்த ஒரு கோடிக்கான கேள்வி என்ன..?

மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா 15 கேள்விகளுக்கும் சரியான விடையளித்து கோடீஸ்வரி ஆகியுள்ளார்.

மாற்றுத்திறனாளி கௌசல்யாவிடம் கேட்கப்பட்ட அந்த ஒரு கோடிக்கான கேள்வி என்ன..?
கவுசல்யா | ராதிகா
  • News18
  • Last Updated: January 22, 2020, 9:50 AM IST
  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கடந்த வாரம் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா 15 கேள்விகளுக்கும் சரியான விடையளித்து கோடீஸ்வரி ஆகியுள்ளார்.

இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார்.  நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா, வாய் பேசமுடியாமல் காது கேட்காமல் இருந்து வருபவர். இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி போட்டியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 1 கோடி ரூபாய் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.


நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் அவர் குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே ஆசை என்று நிகழ்ச்சியில் கூறினார்.மேலும் யாருக்காக விளையாடுகிறீர்கள் என்று கேட்ட போது நாகர்கோவிலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கு ஜெயிக்கும் தொகையை உதவியாக அளிக்க உள்ளதாகக் கூறினார்.

இதற்கிடையில் நிகழ்ச்சியின் 15-வது கேள்வியாக அதாவது ஒரு கோடிக்கான கேள்வியை கௌசல்யாவிடம் ராதிகா கேட்ட அந்த 2 நிமிட வீடியோவை கலர்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் ஒரு கோடிக்கான கேள்வியாக மன்னர் இரண்டாம் புலிகேசியின் கற்பனை இரட்டைச் சகோதரனான நாகநந்தி எனும் கதாபாத்திரம் 1948-ன் எந்த வரலாற்று நாவலில் தோன்றுகிறது என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், சிவகாமியின் சபதம் மற்றும் யவன ராணி என நான்கு தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு சிவகாமியின் சபதம் என சரியான விடையளித்து ஒரு கோடியை வென்ற முதல் கோடீஸ்வரி என்று ராதிகா அறிவிக்கிறார்.

Also see:


 
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்