மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொள்ள என்ன காரணம்? - வெளிவராத தகவல்

news18
Updated: August 18, 2019, 1:24 PM IST
மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொள்ள என்ன காரணம்? - வெளிவராத தகவல்
மதுமிதா
news18
Updated: August 18, 2019, 1:24 PM IST
யாரும் எதிர்பாராதபடி கையில் கட்டுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறினார் நடிகை மதுமிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே காதல் பிரச்னையில் சிக்கித் தவித்தது. அதில் முக்கிய நபராக கருதப்பட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து கஸ்தூரி வைல்ட் கார்ட் என் ட்ரியாக போட்டிக்குள் வந்தார். அவரைத்தொடர்ந்து வாடி ராசாத்தி என்ற பில்டப்புடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்தார் நடிகை வனிதா விஜயகுமார். ஒருவாரம் பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்க்கில் சிறப்பு விருந்தினராக வீட்டில் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் டாஸ்க்கில் பங்கேற்க தொடங்கிய நிரந்தரமாக தங்கினார். இதனால் மற்ற போட்டியாளர்களும் பீதியானார்கள்.


பிக்பாஸ் வீட்டில் புதைக்கப்பட்ட கவினின் காதல் கதைகளும், அபிராமி முகெனின் ஊடல் கதையையும் தோண்டி எடுத்த வனிதா, அதை போட்டியாளர்கள் மத்தியில் பேசுபொருளாக்கினார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரையும் பார்வையாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என தன்னுடைய கருத்தையும் போட்டியாளர்களிடம் கூறினார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் பிரச்னைகள் மூண்டன. போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிந்தனர். வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், அடிமைப்படுத்துவதாகவும் பொங்கி எழுந்தார் மதுமிதா.Loading...

இதனிடையே வனிதாவை முகென் கன்னத்தில் அறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏதோ பெரிதாக நடந்துவிட்டது என்ற எதிர்பார்ப்புடன் சனிக்கிழமை நிகழ்ச்சிக்காக பார்வையாளர்கள் காத்திருந்தனர். நேற்று வழக்கமாக பிக்பாஸ் புரமோக்கள் வெளியாகும் நேரத்தில் வெளியாகவில்லை. இது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை கூட்டியது.

இதையடுத்து 4.40 மணிக்கு வெளியான புரமோவில் கையில் கட்டுடன் மதுமிதா தோன்றினார். கமல்ஹாசனும் உங்களது தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

இந்த புரமோவைப் பார்த்த பார்வையாளர்கள் ஏன் மதுமிதா தன்னைத்தானே தாக்கிக் கொண்டார் என்பதைப் பார்க்க ஆவலாக காத்திருந்தனர்.

நேற்று நிகழ்ச்சி தொடங்கும்போது பேசிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார்.

இந்நிலையில் மதுமிதா ஏன் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹலோ டாஸ்க்கின் போது மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை வனிதா விஜயகுமார் வார இறுதியில் மக்களின் ஓட்டைப் பெற இப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும், பெரும்பாலான போட்டியாளர்கள் தனக்கு எதிராக திரும்பியதால் தான் கூறிய கருத்தை நிரூபிக்க அவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொண்ட சமயத்தில் இதை ஒளிபரப்ப முடியாது என்றும், ஹலோ ஆப்பில் தனது பதிவை மாற்றுமாறும் பிக்பாஸ் மதுவிதாவிடம் வலியுறுத்தியுள்ளார். அதையும் மீறி தனது கருத்தில் உறுதியாக நின்றதால் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடையே பேசிய மதுமிதா, “சேரன் மற்றும் கஸ்தூரியைத் தவிர வேறு யாரையும் பார்க்க விரும்பவில்லை” என்றார்.

அப்போது சேரன், “மதுமிதா எடுத்த முடிவை தவறானது என்று சுட்டிக்காட்டினார்.

வீடியோ பார்க்க: ஷூட்டிங்காக ஜெய்ப்பூருக்கு பறந்த ரஜினி, நயன்தாரா..

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...