ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மேற்கு வங்கத்தில் மாடல் நடிகை சரஸ்வதி தாஸ் தூக்கிட்டு தற்கொலை…

மேற்கு வங்கத்தில் மாடல் நடிகை சரஸ்வதி தாஸ் தூக்கிட்டு தற்கொலை…

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சரஸ்வதி தாஸ் தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேற்கு வங்கத்தில் மாடல் நடிகை சரஸ்வதி தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஒரே மாதத்தில் 4வது மாடல் நடிகை தற்கொலை செய்திருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கொல்கத்தாவில் கஸ்பா என்ற பகுதியில் அமைந்துள்ள பெடியாதங்கா என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் மாடல் நடிகை சரஸ்வதி தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு சரஸ்வதி தாஸ் தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கு குறித்து மேற்கு வங்க போலீசார் கூறியதாவது-

இது ஒரு தற்கொலை வழக்கு என்று தெரிகிறது, ஆனால் நாங்கள் மற்ற கோணங்களையும் பார்க்க வேண்டும். சரஸ்வதியின் பாட்டிதான் அவர் தூக்கில் தொங்குவதை முதலில் கண்டுபிடித்தார். அவர்தான் காய்கறி வெட்டும் இயந்திரத்தை பயன்படுத்தி கயிற்றை அறுத்து சரஸ்வதியை கீழே கொண்டு வந்தார்.

இதையும் படிங்க - விஜய்யின் ‘தளபதி 66’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு… வைரலாகும் போஸ்டர்

மேக்கப் கலைஞராக இருந்த சரஸ்வதிக்கு மாடல்களான மஞ்சுஷா நியோகி, பிதிஷா டி மஜூம்தார் அல்லது தொலைக்காட்சி நடிகர் பல்லபி டே ஆகிய மூவருடனும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு அவளது அம்மாவும் அத்தையும் வேலைக்குச் சென்ற பிறகு சரஸ்வதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. நாங்கள் அவளது மொபைல் ஃபோனைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் எங்கள் விசாரணை தொடர்பாக சரஸ்வதியின் சோஷியல் மீடியா தளங்களில் அவரது செயல்பாட்டைச் சரிபார்த்து வருகிறோம்.

இதையும் படிங்க - இயக்குனர் பாலா குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டிய சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் மாடல் நடிகைகள் மஞ்சுஷா நியோகி, பிதிஷா டி மஜூம்தார், பல்லவி தே ஆகியோர் மரணத்தை தொடர்ந்து மற்றொரு மாடல் நடிகை தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Cinema