Home /News /entertainment /

இது என்ன இப்படியொரு ட்விஸ்டா இருக்கு! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் திடீர் மாற்றம்

இது என்ன இப்படியொரு ட்விஸ்டா இருக்கு! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் திடீர் மாற்றம்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபியும் வெற்றியும் பிரிய போகிறார்கள். இந்த முடிவை எடுத்து இருப்பவர் அபி தான்

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் சமீபத்திய புரமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை மாதங்களாக எதற்காக அபி போராடினாரோ அதை விட்டுட்டு மீண்டும் வீட்டுக்கு போக முடிவு எடுத்துள்ளார்.

    விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக மறிவிட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் வெற்றி - அபி கெமிஸ்ட்ரி. இதனால் இந்த சீரியலை குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்க்கின்றனர். அதுமட்டுமில்லை மின்னல் வேகத்தில் செல்லும் திரைக்கதை. இந்த சீரியலை இயக்குனர் இப்படியே கொண்டு போக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதை புரிந்து கொண்ட இயக்குனர் வாரத்துக்கு ஒருமுறை திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து சீரியலை ஸ்பிடாக எடுத்து செல்கிறார்.

    RRR படத்தை விடுங்க..1990ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பற்றி தெரியுமா?

    அதன்படி இந்த வாரம் முக்கியமான ட்விஸ்ட் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. விருப்பமே இல்லை என்றாலும் ஊருக்காக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த அபியும் வெற்றியும் பிரிய போகிறார்கள். இந்த முடிவை எடுத்து இருப்பவர் அபி தான். இத்தனை நாட்களாக எப்படியாவது வெற்றியை திருத்தி அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என முடிவு எடுத்திருந்தவர், தனது அப்பாவுக்கா இந்த முடிவுவை மாற்றிக் கொள்கிறார்.. வெற்றி மட்டும் இன்னும் அபியை ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழவில்லை.எப்படியாவது அவரை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என துடியாய் துடித்தார் வெற்றி. இவர்களின் டாம் அண்ட் ஜெர்ரி காம்போவை தான்  ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா ... நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இப்படி இருக்கையில் தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில், அபி அப்பாவை ரவுடிகள் கடத்தி விடுகின்றனர். இந்த நேரத்தில் அபி, வேற வழியில்லாம வெற்றியிடம் உதவி கேட்கிறார். இந்த சந்தர்ப்பத்தை சுயநலமாக பயன்படுத்திக் கொண்ட வெற்றி, “ உங்க அப்பாவை நான் காப்பாத்தி கூட்டிட்டு வரேன்.ஆனால் நீ தாலியை கழட்டி வச்சுட்டு, உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் வாழ்க்கை விட்டும் இந்த வீட்டை விட்டு போறேன்னு எழுதி கொடுக்கணும்” என கூறுகிறார். அதற்கு அபியும் ”ஓகே எழுதிக் கொடுக்கிறன், உன்னை விட்டு போறேன்னு நான் மனப்பூர்வமாக எழுதிக் கொடுக்கிறன்” என்கிறார்.



    இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், ஷாக்கில் ”என்ன இப்படியொரு ட்விஸ்ட்?” என்கின்றனர். காரணம், இப்போது தான் கதையில் வெற்றி, அபியை புரிந்து கொள்வது போல் சிம்பத்தி ட்ராக் ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் அதற்குள் இயக்குனர் இருவரையும் பிரிக்கிறார் என்கின்றனர். அதே போல், அபி வீட்டுக்கு திரும்பி சென்ற பின்பு தான் வெற்றி , அபியை மிஸ் செய்வார் என்றும்கூறியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி