விஜே மணிமேகலை - ஹுசைன் ஜோடிக்கு சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவர்கள் இருவரும் தங்களது காதல் கதை, திருமணம் குறித்த நிகழ்வுகளை தங்களது ரசிகர்களுடன் யூடியூப்பில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
சன் மியூசிக்கில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய மணிமேகலை, ஹுசைனை காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடந்த இந்த திருமணத்திற்கு பிறகு மணிமேகலை கணவருடன் வசித்து வருகிறார். விஜய் டிவியில் இருவரும் சேர்ந்து மிஸ்டர் & மிர்ஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தனர். அதிலும் அதற்கு அடுத்து ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கிக்கு பிறகு மணிமேகலை தான் பலரின் ஃபேவரெட்.தொடர்து 3 சீசன்களாக இவர் கோமாளியாக இருந்து இருக்கிறார்.
கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா!
இந்நிலையில் ஹூசைன் - மணி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்கள் காதல் கதை பலருக்கும் தெரியாது. அந்த வகையில் தங்களது லவ் ஸ்டோரியை இருவரும் மிகவும் வித்தியாசமாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். இவர்களின் யூடியூப் வீடியோக்கள் அசால்ட்டாக மில்லியன் பார்வையாளர்களை எட்டிவிடுகிறது.பெரும்பாலும் சீரியஸான மேட்டர்களை வீடியோக்களாக பதிவிடாத மணிமேகலை-ஹுசைன் ஜோடி, இம்முறை கொஞ்சம் 'ஃபீல்' பண்ணி வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!
உதவி நடன இயக்குனரான ஹுசைன் என்பவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் அவரைக் கண்டுபிடித்து தேடிப்போய் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் மணி . இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதற்கு இருவரின் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்க, நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோவில் சென்னையில் இருவரும் முதன் முதலாக சந்தித்த இடம், திருமணத்திற்கு முன்பு மணிமேகலைக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம், திருமணம் செய்த பின்பு சின்ன வீட்டில் குடியேறி சிக்கனமாக வாழ்ந்த காலம் ஆகியவற்றை இருவரும் அந்த இடத்துக்கே சென்று வீடியோவில் காட்டுகின்றனர்.
கொட்டும் மழையில் மிகவும் வித்தியாசமான கான்செப்டில் இந்த வீடியோவை இருவரும் எடுத்துள்ளனர். குறிப்பாக இந்த வீடியோவில் மணிமேகலை ஒரு இடத்தில் தன்னை அறியாமல் அழுது விடுகிறார். இவ்வளவு கஷ்டங்களுக்கு பிறகு தான் இருவரும் வெற்றி ஜோடிகளாக சின்னத்திரையில் வலம் வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.