ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிராமத்து நண்பர்களுடன் சென்னையில் லூட்டி அடித்த மணிமேகலை ஹுசைன்!

கிராமத்து நண்பர்களுடன் சென்னையில் லூட்டி அடித்த மணிமேகலை ஹுசைன்!

வி.ஜே.மணிமேகலை ஹுசைன்

வி.ஜே.மணிமேகலை ஹுசைன்

லாக்டவுன் நேரத்தில் கிராமம் ஒன்றிற்கு தனது கணவர் உசைனுடன் சென்ற மணிமேகலை, அங்குள்ள நண்பர்களுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு, அந்த வீடியோக்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவி மணிமேகலை தனது கிராமத்து நண்பர்களுடன் சென்னையில் என்ஜாய் செய்த வீடியோவை தனது யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையில் நடிகர்-நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தங்களுக்கென்ற தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர். அதில் ஒருவர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை. இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சகணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

காதல் திருமணம் செய்த மணிமேகலை தன் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது. இவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் கிராமம் ஒன்றிற்கு தனது கணவர் உசைனுடன் சென்ற மணிமேகலை, அங்குள்ள நண்பர்களுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு, அந்த வீடியோக்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். தற்போது அவர்களை சென்னைக்கு வர வைத்து அவர்களுடன் அழகான நேரத்தை செலவிட்ட வீடியோவை தனது யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

' isDesktop="true" id="851339" youtubeid="c8ykJnFMTRw" category="television">

ரன்வீர் சிங்கை பார்க்க வைத்து கேக் சாப்பிட்ட பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ

அதில் கிராமத்து நண்பர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் லூட்டி அடிக்கும் ஹுசைனும், மணிமேகலையும், அவர்களுக்கு சென்னையை சுற்றிக் காட்டுகிறார்கள். அதுவும் முதன்முதலில் விமானத்தில் அவர்களை சென்னை அழைத்து வந்திருக்கிறார்கள். பின்னர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்தோம்பல் செய்கிறார்கள். மணிமேகலையின் இந்த வீடியோ தற்போது யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv, Youtube