• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜே மகேஸ்வரிக்கு இப்படியொரு முகம் இருக்கா? ப்ரொபோஸ் செய்யும் அளவுக்கு என்ன நடந்தது?

விஜே மகேஸ்வரிக்கு இப்படியொரு முகம் இருக்கா? ப்ரொபோஸ் செய்யும் அளவுக்கு என்ன நடந்தது?

வி.ஜே.மகேஸ்வரி

வி.ஜே.மகேஸ்வரி

விஜே மகேஸ்வரியா இது என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சியை காட்டி நெட்டிசன்களை திணறடித்து வருகிறார்.

  • Share this:
    தமிழ் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக வந்தவர் தான் VJ மகேஸ்வரி. இவர் விஜே-வாக அறிமுகமானது சன்மியூஸிக்கில் தான்.

    அப்போது சன் மியூசிக் VJ-களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த வகையில், மகேஸ்வரியும் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் ஆவார். அதன் பிறகு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடிகையாக வலம் வந்துள்ளார். சினிமா துறையில் சில படங்களில் நடித்து உள்ளார்.

    அவை, மந்திரப்புன்னகை, சென்னை-28, குயில் போன்ற படங்கள் ஆகும். பிறகு இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எதிலும் தோன்றவில்லை. அவருக்கு திருமணம் ஆனதால் சில காலங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் எதிலும் பங்கு பெறாமல் இருந்தார். தற்பொழுது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது இவர் ஒரு இண்டிபெண்டன்ட் தயாரா வாழ்ந்து வருகிறார். பெரிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதேபோல, தனது சமூக வலைதள பக்கத்தில் தனது ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர் இப்படி ஒரு அவதாரம் எடுப்பார் என்று ரசிகர்கள் சிறுது கூட எதிர்பார்க்கவில்லை. விஜே மகேஸ்வரியா இது என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சியை காட்டி நெட்டிசன்களை திணறடித்து வருகிறார். இந்த லாக் டவுன் காலங்களில் கூட நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி மக்களை அசர வைத்தார். சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகராக இருந்தாலும் சரி ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் இருக்கும் ரசிகர்களை பொறுத்தே அவர்களுடைய தரவரிசையும் சினிமா துறையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜே மகேஸ்வரிக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Vj Maheswari இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@maheswarichanakyan)






    அதிலும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் இன்ஸ்டாகிராமில் தினமும் போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். அதற்கு பிறகு ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் எதிலுமே இவர் தென்படவில்லை. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணையத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் செம ஹாட்டாக. இவர் பிளாக் கலர் உடையில் கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் தொகுப்பாளினி மகேஷ்வரியா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவுகிறது. அந்த போட்டோ ஷுட் புகைப்படத்தையும் அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

    மேலும், அவர் தனது அழகை அப்படியே மெயின்டையின் பண்ணியுள்ளார். உங்களது அழகை பார்க்கும் போது உங்களுக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ஆக்டிவாக இருப்பதும், பல போட்டோஷூட் படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: