VJ Maheshwari: பிரபல கட்சிக்கு ஆதரவாக வி.ஜே.மகேஸ்வரி ட்வீட்!

வி.ஜே.மகேஸ்வரி

பிரபல கட்சிக்கு ஆதரவாக வி.ஜே.மகேஸ்வரி தனது ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

  • Share this:
    பிரபல கட்சிக்கு ஆதரவாக வி.ஜே.மகேஸ்வரி தனது ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

    தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. 10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் அரியணை ஏறுவதற்கும் தீவிர போட்டி நிலவியிருக்கிறது.

    Prabhas: 7 கோடிக்கு ஆடம்பர கார் – மாஸ் காட்டும் பிரபாஸ்!

    அதே நேரத்தில் இரண்டு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்ட மன்ற தேர்தல் என்பதால், ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் திறமையை நிரூபிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, ஒன்றிணைவோம் வா, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற முன்னெடுப்புகளின் மூலம் மக்களை சந்தித்து வந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது தமிழகம் முழுக்க பரபரப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



    தேர்தல் நெருங்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், தனி அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் தங்களுக்குப் பிடித்த கட்சிகளுக்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சின்னதிரை தொகுப்பாளினி வி.ஜே.மகேஸ்வரி தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில், ”தமிழை கணிப்பொறியில் ஏற்றி உலக அரங்கில் தமிழர் வாழ்வின் விளக்கை ஏற்றிய திராவிடம்... vote for DMK 🙏 #VoteForDMK #DMK4TN” என திமுக-வுக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: