Home /News /entertainment /

என்னால முடியல.. வாந்தி வருது.. ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்ட ஆங்கர் ஜாக்குலின்

என்னால முடியல.. வாந்தி வருது.. ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்ட ஆங்கர் ஜாக்குலின்

விஜே ஜாக்குலின்

விஜே ஜாக்குலின்

ஜாக்குலின் நான் வாக்குமூலம் தருகிறேன் என பேச தொடங்குகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவி ஆங்கர் ஜாக்குலின் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்தவர் ஜாக்லின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஆங்கராக களம் இறங்கினார். விஜே என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என விதியை மாற்றி தனது தனித்துவமான குரலாலே ரசிகர்களை கவர்ந்தார் ஜாக்குலின்.சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் கரசில் படித்துக் கொண்டே ஜாக்குலின் பார்ட் டைம்மாக ஆங்கரிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.



    குக் வித் கோமாளி அம்மு அபிராமிக்கு திருமணமா? அவரே சொன்ன பதில்!

    நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் தங்கையாகவும் நடித்து பெரிய திரைக்கும் முகத்தை காட்டி விட்டார். அதே போல் விஜய் டிவியில் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் லீட் ரோலில் நடித்தார். இந்த சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி இருந்து. கடந்த ஆண்டு சீரியல் முடிக்கப்பட்டது. தற்போது ஜாக்குலின் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதே போல் ஜாக்குலினை முன்பு போல் விஜய் டிவியில் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. ஆனால் இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.

    ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு.. மீண்டும் சேர்ந்து நடிக்கும் ஆல்யா - சஞ்சீவ்!

    நடுவில் வெயிட் போட்ட ஜாக்குலின் கடின உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவிலும் ஜாக்குலின் ஷேர் செய்து இருந்தார். பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தனர். வெயிட் லாஸ் என்பது மிக மிக நல்ல விஷயம் எனவும் ரசிகர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் உடல் எடையை குறைக்க ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் ஜாக்குலின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




    அதில் ஜாக்குலின் நான் வாக்குமூலம் தருகிறேன் என பேச தொடங்குகிறார். “என்னால் முடியல , வாந்தி வருது. மூச்சு விட முடியல, சொன்ன வாந்தி எடுத்துட்டு வாங்கன்னு சொல்றாங்க. 3 நாளைக்கு எழுந்துக்க முடியல. அப்படியொர்ரு வலி. குடல் எல்லாம்  எரியுது. சொன்னா இது எல்லாம் நார்மல் அப்படின்னு சொல்றாங்க., இந்த ஜிம்மில் என்ன வசி செய்யுறங்க” என்று வீடியோவில் கூறுகிறார். அதாவது ஜாக்குலின் ஜிம் ட்ரெயினர் அவரை விடாமல் வொர்க்கவுட் செய்ய வைக்கிறார் போல. அதை தான் ஜாக்குலின் இப்படி அழுதுக் கொண்டே புலம்பி தள்ளுகிறார். இது இன்னும் முடியலையாம் பார்ட் 2 வேற இருக்காம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv, Viral

    அடுத்த செய்தி