தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் அபிமானம் பெற்ற பல நிகழ்ச்சிகள் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகளில் கடும் போட்டி என்றால் அது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஆகிய இரண்டுக்கும் இடையே தான் நிலவி வருகிறது.
பல முன்னணி டிவி சேனல்களில் திங்கட்கிழமை துவங்கி சனி வரை, காலை - இரவு வரை எண்ணற்ற சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அதேசமயம் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ரசிகர்களை பொறுத்த வரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என இரண்டுக்குமே பாரபட்சம் பார்க்காமல் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நடுத்தர வயதினர், டீனேஜர்ஸ் என அனைத்து தரப்பினரும் சீரியல்களை விரும்பி பார்த்து ரசித்து வருகின்றனர். எனவே தான் பிரபல டிவி சேனல்கள் அனைத்திலுமே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல டிவி சேனலாக இருந்து வரும் ஜீ தமிழ் சேனலில் நிறைய சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று 'சித்திரம் பேசுதடி'. இந்த சீரியலில் நாயகி தங்கமயில் கேரக்டரில் நடிகை தீபிகா ரங்கராஜ், நாயகன் ஜீவா கேரக்டரீல் நடிகர் ஷிவ் சதிஷ் நடித்து வருகின்றனர். தங்கமயிலின் அப்பா குருமூர்த்தியாக நடிகர் பாபூஸ் பாபுராஜ் நடித்து வருகிறார். பாலின சார்பு மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற பல சமுதாய பிரச்சனைகள் குறித்து இந்த சீரியலில் பேசப்பட்டதால் மக்கள் மத்தியில் பிரபலமானது.
மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஹிட் சீரியலில் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான சீரியல் பிரபலம் ஒருவர் இணைய உள்ளார். விஜய் டிவி-யின் சூப்ப ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸிஸ் முன்பு ஐஸ்வர்யாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஜே தீபிகா தான், தற்போது சித்திரம் பேசுதடி சீரியலில் புதிதாக இணைய இருக்கிறார்.
Also Read : கவின் உடன் பிரேக்-அப் ஆக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லாஸ்லியா!
இது தொடர்பான சில போட்டோக்கள் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. அதே போல ஜீ தமிழின் இன்ஸ்டாவில் "எதிரும் புதிருமாய் இருக்கும் குருவுக்கும் - மயிலுக்கும் இடையே எதிர்பாராமல் வரும் தீபிகா" என்ற வசன இன்ட்ரோவுடன் விஜே தீபிகா வரும் சீன்கள் குறித்த ப்ரமோ வீடியோ ஷேர் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த விஜே தீபிகா, சில தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இதனால் விஜய் டிவி ரசிகர்கள் வருத்தமடைந்திருந்தனர். இந்நிலையில் ஜீ தமிழ் மூலம் மீண்டும் சீரியலுக்கு வந்துள்ள விஜே தீபிகாவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.