Home /News /entertainment /

கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தனுஷ் - பார்வதியாக மாறிய சீரியல் ஜோடி!

கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தனுஷ் - பார்வதியாக மாறிய சீரியல் ஜோடி!

தீபிகா - சரவண விக்ரம்

தீபிகா - சரவண விக்ரம்

இவர்களின் கெமிஸ்ட்ரியை ரசித்து பக்கம் பக்கமாக கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீல் பேரான கண்ணன் - ஐஸ்வர்யா இன்ஸ்டா வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை வாரி குவிக்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சொல்லப்போனால் கதிர் - முல்லை ஜோடிக்கு பிறகு கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி செம்ம ஹிட் அடித்தது. இவர்களின் காதல் திருமணம், ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை பெரிதளவில் கவர்ந்தது. ஆனால் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா தீடீரென்று மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சாய் காயத்ரி ஐஸ்வர்யா ரோலில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன் பிறகு கண்ணன் - ஐஸ்வர்யா ரொமான்ஸ் சீரியலில் மொத்தமாகவே இல்லாமல் போனது. சீரியலில் ஜோடியாக நடித்த தீபிகாவும் சரவணவ விக்ரமும்  (கண்ணன்) ரியல் லைஃபில் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.

    க்யூட்.. ஸ்வீட்.. ஸ்மார்ட்.. பொறாமை பட வைக்கும் இயக்குனர் அகத்தியனின் மகள்கள்!

    இருவரும் சேர்ந்து ஷார்ட் பிலிம்களில் நடிப்பது, இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோவை வெளியிடுவது, படத்தின் பெஸ்ட் காட்சிகள் அல்லது பாடல்களை ரீ க்ரியேஷன் செய்வது என சோஷியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கின்றனர். இதுப்போக சரவண விக்ரம், தீபிகாவின் யூடியூப் சேனலுக்கும் சில உதவிகளை செய்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தீபிகா - சரவணன விக்ரம் வெளியிட்ட திருச்சிற்றம்பலம் பழம் பாடல் ஆக்டிங் வீடியோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by SaravanaVickram (@saravanavickram)






    ரசிகர்கள் பலரும் இவர்களின் நடிப்பு திறமையை மனதார பாராட்டி இருந்தனர். இப்படி இருக்கையில் இப்போது மற்றொரு தனுஷ் பாடல் வீடியோவை இருவரும் ரீ ஆக்டிங் செய்து வெளியிட்டுள்ளனர். தனுஷ் - பார்வதி நடித்த மாரி படத்தில் ’நேற்று அவள் இருந்தால்’ பாடலுக்கு தத்ரூபமாக நடித்து அதை வீடியோவாக இன்ஸ்டாவில் இருவரும்  வெளியிட்டுள்ளனர்.




    இவர்களின்  ஸ்கீரின் கெமிஸ்ட்ரியை பார்த்த ரசிகர்கள் இருவரையும் பயங்கரமாக ரசித்து புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதுமட்டுமில்லை முக்கியமாக இவர்களின் கெமிஸ்ட்ரியை ரசித்து பக்கம் பக்கமாக கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி