• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வி.ஜே.தீபிகா?

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வி.ஜே.தீபிகா?

கண்ணன் - ஐஸ்வர்யா

கண்ணன் - ஐஸ்வர்யா

சமீபத்தில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு நீக்கப்பட்டார்.

  • Share this:
    மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு வி.ஜே.தீபிகா பதிலளித்திருக்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பாச காட்சிகள், சின்ன சின்ன சண்டைகள், நகைச்சுவைகள் உள்ளிட்டவை மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் மொத்த குடும்பமும் அவனை வெறூத்து ஒதுக்கினார்கள். அதோடு வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா சமீபத்தில் மாற்றப்பட்டு, அந்த கதாபாத்திரத்தில் ‘ஈரமான ரோஜாவே’ சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

    ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் வைஷாலி தனிகா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தான் வி.ஜே.தீபிகா. அதோடு அவர் மாற்றப்பட்டதற்கு அவரின் முகப்பரு தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பீர்களா? என வி.ஜே.தீபிகாவிடன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வாய்ப்பே இல்லை, என பதிலளித்திருக்கிறார் தீபிகா.

    இதற்கிடையே சாய் காயத்ரி கண்ணனனை விட முதிர்ச்சியாக தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்படுமா? அல்லது அவரே தொடர்ந்து நடிப்பாரா எனத் தெரியவில்லை.




    தவிர சமீபத்தில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு நீக்கப்பட்டார். இதற்குக் காரணம் டி.ஆர்.பி-யா? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல், ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஷீலாவின் மகனும் நடிகருமான விக்ராந்தா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கும், விக்ராந்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனத் தெளிவுப்படுத்திய நடிகை ஷீலா, விரைவில் விஜய் டிவி-யில் தொடங்கப்படவிருக்கும் புதிய சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக நடிக்கவிருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: