Home /News /entertainment /

VJ Chitra : மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

VJ Chitra : மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

விஜே சித்ரா

விஜே சித்ரா

serial actress vj chitra : சித்ராவின் மரணம் தற்போது வரையிலும் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதியுடன் சித்ரா இறந்து ஓராண்டு நிறைவு பெற்றது.

    பொதுவாக சின்னத்திரையில் ஏராளமான நடிகைகள் இருந்தாலும், ஒரு சிலரை மட்டுமே மக்கள் அதிகம் நேசித்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் நடிப்பு திறம் மட்டுமல்லாம், அவர்களுடைய முழு குணாதிசயமும் அடங்கும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த சின்னத்திரை நடிகை தான் சித்ரா. இவர் தொலைக்காட்சியில் முதல் முதலாக தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு விடாமுயற்சியின் காரணமாக பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வந்தார். அதிலும் அவர் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அதில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்தார். முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பல ரசிகர் பட்டாளம் சித்ராவிற்கு உருவானது. இதனால் இல்லத்தரசிகளின் விருப்பமான நபராக மாறி இருந்தார். மேலும் பல இளைஞர்களுக்கும் சித்ராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.

    இதையும் படிங்க.. தலைநிமிர்ந்த தமிழ் சினிமா.. இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

    இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சித்ராவிற்கும், ஹேம்நாத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மர்மமான முறையில் சித்ரா தான் தங்கி இருந்த அறையில் தூக்கி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இவரின் தற்கொலையை எவராலும் ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது. இளம் வயதில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாவது ஒரு சிலரால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட மைல் கல்லை சித்ரா அடைந்திருந்தார். மேலும் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு சித்ராவை தூண்டி இருப்பார் என்கிற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளி வந்துவிட்டார்.




    சித்ராவின் மரணம் தற்போது வரையிலும் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதியுடன் சித்ரா இறந்து ஓராண்டு நிறைவு பெற்றது. இதற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிந்து வந்தனர். இந்நிலையில் சித்ராவின் ரசிகர் ஒருவர் அவரின் நினைவை எப்போதும் மறக்க கூடாது என்பதற்காக சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை இந்த ரசிகர் தனது மார்பில் பச்சைக்குத்தி கொண்டுள்ளார். இந்த டாட்டூ பார்ப்பதற்கு உயிர்ப்புடன் உள்ளது. மேலும் இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவாக இவர் போட்டுள்ளார். இந்த பதிவை சித்ராவின் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை சித்ராவின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க.. தாமரையின் நிஜ முகத்தை பார்த்து ஷாக்.. உடைந்து அழும் பிரியங்கா!

    இவ்வளவு தீவிரமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட சித்ராவின் மரணம் தற்போதை வரையிலும் நீங்கா அதிர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv, Vj chitra

    அடுத்த செய்தி