Home /News /entertainment /

நீண்ட நாள் காத்திருப்பு.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி விஜே பாவனா!

நீண்ட நாள் காத்திருப்பு.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி விஜே பாவனா!

விஜே பாவனா

விஜே பாவனா

பாவனா பாலகிருஷ்ணன், மீண்டும் சின்னத்திரையில் களமிறங்க இருக்கிறார்.

    பாவனா பாலகிருஷ்ணன் அல்லது விஜே பாவனா என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு ஆர்ஜே வாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பாவனா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பரிச்சயமான முகமாக இருந்த பாவனா இந்திய அளவில் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும் மாறியது மிகப்பெரிய சாதனையாகும்.

    வானொலி தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை தொடங்கிய பாவனா, நிகழ்ச்சி தொகுப்பாளராக ராஜ் தொலைக்காட்சியில் ‘பீச் கேர்ள்ஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்பு விஜய் டிவியில் இணைந்த பாவனா, சேனலின் மிகவும் விரும்பப்படும் தொகுப்பாளராக மாறினார்.

    சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் 1 என்று பல்வேறு சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களை கலகலப்பாக தொகுத்து வழங்கிய பாவனாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது. விஜய் டிவியில் இவர் பல நிகழ்ச்சிகளை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்டாக 2018ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இணைந்தார்.

    இந்தியாவில் கிரிக்கெட்டை பொறுத்த வரை பெண் வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த விளையாட்டு பத்திரிக்கையாளர் மயன்த்தி லாங்கர். அவருக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார் பாவனா பாலகிருஷ்ணன்.

    தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பாவனா பாலகிருஷ்ணன், மீண்டும் சின்னத்திரையில் களமிறங்க இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 வின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பாவனா மீண்டும் சின்னத்திரையில் அடி எடுத்து வைக்கிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாவனா, தன்னுடைய சோஷியல் மீடியா கணக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.




    நடிகை குஷ்பூ மற்றும் அவரின் நெருங்கிய தோழியான பிருந்தா மாஸ்டரும் தான் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 வின் நடுவர்கள். இந்த நிகழ்ச்சியில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு தலைவர் என்ற அடிப்படையில் பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். குழுக்களின் தலைவர்களாக நடிகை இனியா, நடிகர் ஷாம், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பாவனா சிறப்பு எபிசோடுகளை தொகுத்து வழங்க இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் எபிசோடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த எபிசோடுகள் வரும் டிசம்பர் 11 முதல் ஒளிபரப்பாகும். மேலும், இந்த சீசனின் பிரம்மாண்ட இறுதி நிகழ்ச்சியையும் இவரே தொகுத்து வழங்குகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி