• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அழகுக்காக ராஜா ராணி 2 அர்ச்சனா செய்த வேலை.. தீயாய் பரவும் புகைப்படத்தின் உண்மை என்ன?

அழகுக்காக ராஜா ராணி 2 அர்ச்சனா செய்த வேலை.. தீயாய் பரவும் புகைப்படத்தின் உண்மை என்ன?

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி அர்ச்சனா

அர்ச்சனாவின் ரசிகர்கள் இது ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் என வாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் மிகச் சிறந்த சின்னத்திரை நடிகையாக வலம் வரும் விஜே அர்ச்சனா குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  அர்ச்சனா சின்னத்திரையில் நுழைந்த மிக குறுகிய காலத்திலே தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவை திட்டி தீர்க்காத இல்லத்தரசிகளே இல்லை முதல் சீரியலில் சபாஷ் வாங்கி விட்டார். சென்னை பெண்ணான அர்ச்சனாவின் அப்பா கல்லூரி பேராசியரியர். வழக்கம் போல் இன்ஜினியரிங் படித்த அர்ச்சனாவிற்கு சினிமா மீது ஆசை. அதிலும் ஆங்கராக வேண்டும் என்பதையே லட்சியம், டிக்டாக் மூலம் ஈஸியாக சோஷியல் மீடியாவில் வைரல் ஆனார்.

  இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதன்முறையாக ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இயல்பாகவே நல்ல குரல் வளம் பெற்ற இவர், ஆங்கரிங்கிலும் கலக்கினார். அதன் பின்பு இன்ஸ்டா மூலம் விஜய் டிவி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவிலும் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டார்.இன்றை அதே விஜய் டிவி சீரியலில் வில்லி ரோலில் அசத்தி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளார்.

  பாரதி கண்ணம்மா: இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த போராட்டமோ?

  சின்னத்திரையில் நுழைந்த பின்பு அர்ச்சனாவை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் எண்னிக்கையும் அதிகரித்தது. அவ்வப்போது பிரைடல் ஷூட் ஃபோட்டோக்களையும் வெளியிடுவார். சமீபத்தில் வெயிட் லாஸ்ஸூம் செய்துள்ளார். அதற்கான ரிசல்ட் ஸ்கிரீனில் தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அர்ச்சனா குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீரியலில் நடிக்க தொடங்கிய பின்பு பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. சிகிச்சைக்கு முன்பு பின், என அர்ச்சனாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  ஆனால், அர்ச்சனாவின் ரசிகர்கள் இது ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் என வாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சிலர் அப்படியே அர்ச்சனா பல் சீரமைப்பு சிகிச்சை செய்து கொண்டிருந்தாலும் அதில் தவறேதும் இல்லை என்றும், இந்த பல் சீரமைப்பு சிகிச்சையை அர்ச்சனா மட்டுமில்லை இந்த நவீன காலத்தில் கல்லூரி பெண்கள் அதிகம் செய்து கொள்வதாகவும் ஃபேஸ் சர்ஜரி போன்று இதுவும் இப்போது இயல்பான ஒன்று தான் என்கின்றனர். ஆனால் பல் சீரமைப்பு சிகிச்சை செய்தது உண்மையா? இல்லையா? என்பது அர்ச்சனாவுக்கு மட்டுமே தெரியும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: