முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சீரியலை விட்டு வெளியே வந்ததும் அப்படியொரு ஃபோட்டோ! அர்ச்சனா என்னதான் சொல்ல வர்றீங்க?

சீரியலை விட்டு வெளியே வந்ததும் அப்படியொரு ஃபோட்டோ! அர்ச்சனா என்னதான் சொல்ல வர்றீங்க?

விஜே அர்ச்சனா

விஜே அர்ச்சனா

புதிய பரிமாணம் என்னவென்று அர்ச்சனா உடைத்து சொல்லும் வரை ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

ராஜா ராணி 2 சீரியலை விட்டு விஜே அர்ச்சனா விலகினார். இந்த தகவல் அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சீரியலில் ஆல்யா விலகிய பின்பு ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவின் நடிப்புக்காவே விடாமல் சீரியலை பார்த்து வந்தனர். ஆனால் கடைசியில் திடீரென்று அர்ச்சனா சீரியலுக்கு பாய் சொல்லிவிட்டார். அர்ச்சனாவின் இந்த முடிவை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லை இதற்கான காரணமும் தெரியாமல் குழம்பினர். அர்ச்சனாவுக்கு திருமணமா? வெள்ளித்திரையில் நடிக்க போகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்தது.

மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி.. பாக்கியாவிடம் வசமாக சிக்கினார்!

இதற்கு பதில் சொல்லும் விதமாக அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார்.அதில் புதிய பரிமாணத்தில் உங்களை சந்திக்கிறேன் என்றார். ஆனாலும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. மீண்டும் சீரியலுக்கு வரும்படி தொடர்ந்து கமெண்டுகளை பதிவு செய்து வந்தனர். அவரது ரோலில் இப்போது ஈரமான ரோஜாவே அர்ச்சனா குமார் நடித்து வருகிறார். அவரின் என்ட்ரி பற்றியும் குறிப்பிட்டு அர்ச்சனாவை மிஸ் செய்வதாக கூறி இருந்தனர்.
 
View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)இந்நிலையில் ராஜா ராணி 2வில் கடைசியாக அர்ச்சனா நடித்த வளைக்காப்பு காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன் "நம்பிக்கை என்பது விழித்திருக்கும் கனவு” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை மீண்டும் சீரியலுக்கு வரும்படி அழைத்துள்ளனர். எந்த காரணத்திற்காக சீரியலை விட்டு சென்று இருந்தாலும் சரி எங்களுக்காக மீண்டும் வாருங்கள் என கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லை அர்ச்சனாவின் இந்த புகைப்படத்துக்கு பின்னால் வேற காரணம் இருக்குமோ? எனவும் ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த புதிய பரிமாணம் என்னவென்று அர்ச்சனா உடைத்து சொல்லும் வரை ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv