மூளை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வி.ஜே.அர்ச்சனா தற்போது எப்படி இருக்கிறார் என அவரது தங்கை அனிதா, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கவனம் பெற்றார்.
இந்நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பதறி போனார்கள். ஆனால் தனது கடினமான தருணத்தையும், காமெடியாக தெரிவித்த அர்ச்சனா தனது பதிவில், “ஹலோ எனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர்கள், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதாக நம்புகிறேன். எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாக பாதித்துள்ளது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.
View this post on Instagram
இன்று எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வேடிக்கையாக கூறியுள்ள அர்ச்சனா, இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டு, மருத்துவமனையில் இருக்கும் படங்களையும் பகிர்ந்துக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததென்றும், இன்னும் மயக்க நிலையில் இருக்கும் அர்ச்சனாவுக்கு சுய நினைவு திரும்பவில்லை என்றும் அவரது மகள் ஸாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அர்ச்சனா எப்படி இருக்கிறார்கள், ஆர்யனின் அழகான முகம் மற்றும் அர்ச்சனாவின் புன்னகைக்காக காத்திருக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் பயனர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனாவின் தங்கை அனிதா, ‘அச்சுமா நன்றாக இருக்கிறார். சீக்கிரம் திரும்பி வருவார். அவர் வந்ததும் பேபி ஆர்யன் உங்களை சந்திப்பான்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv