VJ Archana Health: ’அச்சும்மா வீட்டுக்கு வந்துட்டாங்க’ - வி.ஜே. அர்ச்சனா மகள் ஸாரா ஹேப்பி அண்ணாச்சி!

வி.ஜே.அர்ச்சனா

நாளை என்பது இருக்கிறதா எனத் தெரியவில்லை, அதனால் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்”

  • Share this:
    மூளை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.ஜே.அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஸாரா தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கவனம் பெற்றார்.

     

    VJ Archana health condition after brain surgery, archana daughter Zara, vj archana health, update on vj archana health, vj archana health update, vj archana surgery, vj archana hospital, vj archana health condition, vj archana health condition now, vj archana age, bigg boss archana hospital, bigg boss archana health, bigg boss archana health condition now, bigg boss archana surgery, விஜே அர்ச்சனா உடல்நிலை, விஜே அர்ச்சனா ஹெல்த், விஜே அர்ச்சனா மூளை அறுவை சிகிச்சை, விஜே அர்ச்சனா ஆபரேஷன், விஜே அர்ச்சனா ஹாஸ்பிடல், விஜே அர்ச்சனா மருத்துவமனை, பிக் பாஸ் அர்ச்சனா, பிக் பாஸ் அர்ச்சனா உடல்நிலை, பிக் பாஸ் அர்ச்சனா ஹெல்த், பிக் பாஸ் அர்ச்சனா மருத்துவமனை

    இந்நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் அர்ச்சனா. இதைப் பார்த்த ரசிகர்கள் பதறி போனார்கள். இதையடுத்து கடந்த வாரம் அவருக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைப்பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் பின் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததென்றும், ஆனால் இன்னும் மயக்க நிலையில் இருக்கும் அர்ச்சனாவுக்கு சுய நினைவு திரும்பவில்லை என்றும் அவரது மகள் ஸாரா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது அர்ச்சனாவின் ஹெல்த் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் ஸாரா. அதில் அர்ச்சனாவின் கையை பிடித்திருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட ஸாரா, “அச்சும்மா திரும்பி வந்து விட்டார். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்போம். நாளை என்பது இருக்கிறதா எனத் தெரியவில்லை, அதனால் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதையடுத்து மூளை அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வீடு திரும்பியிருக்கும் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: