நீ எனக்கு பிள்ளையாக வேண்டும் - பாலாஜியிடம் தாய்ப்பாசத்துடன் அழும் அர்ச்சனா

பாலாஜியிடம் தன் பாசத்தை வெளிப்படுத்திய அர்ச்சனா கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

நீ எனக்கு பிள்ளையாக வேண்டும் - பாலாஜியிடம் தாய்ப்பாசத்துடன் அழும் அர்ச்சனா
அர்ச்சனா மற்றும் பாலாஜி
  • Share this:
கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ரேகா மட்டுமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா என்ட்ரி ஆனதிலிருந்தே அவருக்கும் பாலாஜிக்கும் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. அர்ச்சனா, ரியோ உள்ளிட்டோர் குழுவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய பாலாஜி, பட்டிமன்றம் டாஸ்க்கில் நடுவராக இருந்த அர்ச்சனா தன்னுடைய வேலையை மட்டும் பார்க்குமாறும் கூறினார்.

அர்ச்சனா - பாலாஜி இடையே மெல்ல மெல்ல புகைந்து கொண்டிருந்த பிரச்னை தற்போது சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக்குழு வெளியிட்ட 3 புரமோக்களிலும் அர்ச்சனா - பாலாஜியே அதிகம் இடம்பெற்றுள்ளனர்.
முதல் வீடியோவில் பாலாஜி கண்ணீர் விட்டு அழுதிருந்த நிலையில் 3 -வது புரமோ வீடியோவில் அர்ச்சனா தாய்ப்பாசத்தை பாலாஜியிடம் வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இது பிக்பாஸ் பார்வையாளர்களை கண் கலங்க வைத்துள்ளது.


பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா, ஆரம்பத்திலிருந்தே பாலாஜியை குழந்தையாக எண்ணி வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading