விஜே அஞ்சனாவின் மாமனாரும் கயல் சந்திரனின் தந்தையுமான சுப்ரமணியன் நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் விஜே அஞ்சனா கதறி கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இழப்பில் இருந்து மீண்டு வர அஞ்சனாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தொலைக்காட்சி பிரபலங்கள் வரிசையில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் சன் மியூசிக் விஜே அஞ்சனா. இவர் தனது கேரியரை சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து தொடங்கினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதில் பணியாற்றிய அஞ்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என எல்லா சேனலிலும் மூவி புரமோஷன் பேட்டி, சிறப்பு நிகழ்ச்சி, படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி என இதுவரை பல நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கி இருக்கிறார். இதுத்தவிர தற்போது இசை வெளியிட்டு விழா, சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.
சேர போகும் பாரதி - கண்ணம்மா? இன்றைய எபிசோடில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
அஞ்சனாவுக்கும் கயல் படத்தின் ஹீரோ சந்திரனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடிக்கு 5 வயதில் மகன் இருக்கிறான். அஞ்சனா சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். தனக்கு கொரோனா பாசிடிவ் வந்த விஷயத்தை கூட இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு அதுக் குறித்து விழிப்புணர்வு போஸ்ட் ஒன்றையும் ஷேர் செய்து இருந்தார்.
இப்படியொரு அதிர்ச்சியை எப்படி தாங்கி கொள்வார் கணேசன்! கவலையில் குணா
இதுத்தவிர அவ்வப்போது ஃபோட்டோஷூட் படங்களையும் அஞ்சனா போஸ்ட் செய்வார். இந்நிலையில் அஞ்சனா வீட்டில் ஒரு சோகம் அரங்கேறியுள்ளது. அஞ்சனாவின் மாமனாரும் கயல் சந்திரனின் தந்தையுமான சுப்ரமணியன் நேற்று உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்கின் போது அஞ்சனா ரோட்டில் நின்று கதறி துடித்து தேம்பி தேம்பி அழுதார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கதறி அழும் அஞ்சனா
இந்த தகவல் இணையத்தில் பரவியதும் ரசிகர்கள் பலரும் அவருக்கு இன்ஸ்டாவில் ஆறுதல் மேசேஜ்களை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை அஞ்சனாவின் சினிமா நண்பர்கள், ஆங்கர்கள், விஜே ஃபிரண்ட்ஸ் பலரும் அஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.