Home /News /entertainment /

தனிமையில் விஜே அஞ்சனா.. ஆறுதல் கூறி தேற்றும் ரசிகர்கள்!

தனிமையில் விஜே அஞ்சனா.. ஆறுதல் கூறி தேற்றும் ரசிகர்கள்!

விஜே அஞ்சனா

விஜே அஞ்சனா

விஜே அஞ்சனா சமீபத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று அவரின் ரசிகர்களை கவனம் பெற வைத்துள்ளது.

    தொலைக்காட்சி பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக சில தொகுப்பாளினிகளுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர்களுள் அஞ்சனாவும் மிக பிரபலமானவர். இவர் தனது கேரியரை சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து தொடங்கினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதில் பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இவர் அடுத்ததாக புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி சேனல்களிலும் தொகுப்பாளினியாக வேலை செய்துள்ளார். மேலும் இவர் ஏராளமான இசை வெளியிட்டு விழா, சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர். இவர் சமீபத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று அவரின் ரசிகர்களை கவனம் பெற வைத்துள்ளது.

    தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதை அறிவிக்கும் வகையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.  அதில் தனக்கு கொரோனா ஏற்பட்டதை பற்றி விரிவாக கூறியுள்ளார். " எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. மனதளவிலும் உடலளவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அதன்பின் காய்ச்சல் வந்தது. எனவே இரண்டு முறை கொரோனா ரேபிட் டெஸ்ட் எடுத்து கொண்டேன். அதில் இரண்டு முறையும் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தது. அடுத்து ஆர்டிபிசிஆர் பரிசோதனையை செய்து கொண்டேன்.

    இதையும் படிங்க.. ரோஜா சீரியல் நடிகையின் தாய் பாசத்தை கண்டு பூரித்து போன ரசிகர்கள் கூட்டம்!

    அதில் எனக்கு பாசிடிவ் எனஎன்று ரிசல்ட் வந்தது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை எனக்கு வெளிக்காட்ட சுமார் 3 முதல் 14 நாட்கள் எடுத்துக்கொண்டது. எனவே உங்களுக்கு இது போன்று ஏற்படும் அறிகுறிகளை அவசியம் கவனித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றானது ரேபிட் டெஸ்டில் கூட பெரிதாக தெரிவதில்லை. இந்த முறை இந்த வைரஸ் மிக வேகமாகவும், வீரியம் அதிகமாகவும் கொண்டு பரவுகிறது. தற்போது நான் என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன்.” என்று அஞ்சனா பதிவிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Anjana Rangan (@anjana_rangan)






    இந்த பதிவை பலர் பார்த்து வருகின்றனர். அஞ்சானவின் ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக இருக்க சொல்லி கேட்டுள்ளனர். மேலும் பலர் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "தற்போது பரவி வரும் கொரோனாவிடம் இருந்து நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் "எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் பலர், "சீக்கிரம் குணமாகி வாருங்கள்" என்று கமெண்ட் செய்துள்ளனர்.

    இந்த முறை பரவி வரும் கொரோனாவானது எல்லா மக்களையும் தாக்க கூடியதாக இருக்கும் என்பது மட்டும் புரிகிறது. எனவே எல்லோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது. இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Corona, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி