Home /News /entertainment /

மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

விஜே அஞ்சனா

விஜே அஞ்சனா

மேடையில் பேசிய நடிகர் விக்ரம், அஞ்சனாவின் பெயரை சொல்லி திடீரென்று அழைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜே அஞ்சனாவுக்கு கோப்ரா ட்ரெய்லர் லான்ச் விழாவில் மிகப் பெரிய சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

    சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. தனது தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைலால், ரசிகர்களைக் கவர்ந்தவர்.சன் மியூஸிக்கில் தன் கெரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். சின்னதிரையில் நீண்ட நாட்களாக மகுடம் சூட்டப்படாத ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    ’தென்றல் வந்து என்னை தொடும்’ வெற்றியின் செல்ல மகனை பார்த்து இருக்கீங்களா?

    இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது ஃபோட்டோஷூட் படங்களை வெளியிடுவார். திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும், பார்ப்பதற்கு இன்னும் 20 வயது அழகியாகவே ஜொலிக்கிறார். சினிமா தவிர கார்ப்ரேட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸாகும் பான் இந்தியா படங்களின் ஆடியோ லான்ச், செய்தியாளர் சந்திப்பு போன்ற பிராண்ட நிகழ்ச்சிகளின் ஆங்கரும் அஞ்சனா தான்.

    ரூ. 2 லட்சம் கொடுத்து பிரம்மாண்ட பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

    இந்நிலையில் நேற்றைய தினம் நடைப்பெற்ற விக்ரமின் கோப்ரா படத்தின் ட்ரெய்லர் லான்ச் விழாவை அஞ்சனா தொகுத்து வழங்கினார், ஆகஸ்ட் 25 ஆம் தேதியான நேற்று அஞ்சனாவின் பிறந்த நாளும் கூட. இந்த விழாவில் மேடையில் பேசிய நடிகர் விக்ரம், அஞ்சனாவின் பெயரை சொல்லி திடீரென்று அழைத்தார். ஷாக் ஆகி அஞ்சனா வர, பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கூறி அஞ்சனாவை நெகிழ வைத்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Anjana Rangan (@anjana_rangan)






    இது தான் சீயான் லவ் என்பது. இந்த அழகிய தருணத்தை தனது இன்ஸ்டாவிலும் அஞ்சனா பதிவு செய்துள்ளார். அதில் பிறந்த நாளில் நான் எப்போதுமே வேலை செய்தது இல்லை. ஆனால் பிறந்த நாள் அன்று வொர்க் செய்த எனக்கு சீயானின் அன்பும் வாழ்த்துக்களும் கிடைத்தது. செம்ம ஹேப்பி இது போதும். என கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Vikram, Anjana Anchor, Sun TV

    அடுத்த செய்தி