புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் பிறந்தநாளில், அவரது மனைவி ராணி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வாங்கினார். தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார்.
சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே.ஆனந்த கண்ணன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். 2008-ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கட் பிரபுவின் 'சரோஜா' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். புற்றுநோயுடன் போராடி வந்த அவர், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது சொந்த நாடான சிங்கப்பூரில் காலமானார். 48 வயதில் ஆனந்த கண்ணன் மறைந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
மறைவுக்கு முன் சில மாதங்களாக கடுமையான புற்றுநோயுடன் (பித்தப்பை புற்றுநோய்) போராடி வந்தார். தமிழகத்தில் தோன்றிய கிராமியக் கலைகளை சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி அந்த நாட்டு மக்களுக்கும் பயிற்றுவித்து வந்தார் ஆனந்த கண்ணன். கிராமிய பயிற்சிகளை ‘ஆனந்த கூத்து’ என்ற அமைப்பின் மூலம் கற்பித்த அவர், தான் ஆத்மார்த்தமாக இதை செய்வதாகவும், அதனால் இந்த நொடியே தனது உயிர் பிரிந்தாலும்
மகிழ்ச்சி தான் எனவும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்திருந்த நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!
அவர் இறந்து 7 மாதங்களுக்கு மேலான நிலையில், tv சில தினங்களுக்கு முன்னர் ஆனந்த கண்ணனின் 49-வது பிறந்தநாள் வந்தது. இதை முன்னிட்டு அவரின் மனைவி ராணி கண்ணன்,
இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆனந்த கண்ணன் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ”எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ஆனந்த கண்ணனின் ரசிகர்கள் எமோஷனலாகி, தங்கள் சோகத்தை கமெண்ட்ஸில் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.