மேடை நாடகம், தெருக்கூத்து, பறையிசை... அறியப்படாத ஆனந்த கண்ணனின் மறுபக்கம்!

ஆனந்த கண்ணன்

Bile Duct Cancer எனும் மிகவும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்தார் ஆனந்த கண்ணன்.

 • Share this:
  பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  2000-ன் தொடக்கத்தில் சன் மியூசிக், SS மியூசிக் என தமிழில் பிரபலமாக இருந்த மியூசிக் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூர் தமிழரான இவர் 2001 முதல் 2011 வரை சென்னையில் டிவி தொகுப்பாளராக பணியாற்றினார்.   
  View this post on Instagram

  A post shared by Anandha Kannan (@anandhakannan)

  தொலைக்காட்சியில் பிரபலமடைந்திருந்த ஆனந்த கண்ணன் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி ராணியும் சிங்கப்பூரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து கடந்த 2011-ல் இருந்து மீண்டும் முழுமையாக சிங்கப்பூரில் குடியேறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  View this post on Instagram

  A post shared by Anandha Kannan (@anandhakannan)

  பின்னர் கிராமியக் கலைகள் மீதான ஆர்வத்தால், தான் கற்ற பாரம்பரிய தமிழ் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக சிங்கப்பூர் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். துடும்பு மற்றும் பறை இசையும் இதில் அடங்கும்.

  VJ Anandha Kannan taught Tamil Nadu rural arts to Singapore peoples, Sun Music VJ Anandha Kannan passed away due to cancer, anandha kannan, anandha kannan news, anandha kannan age, anandha kannan wife, anandha kannan wife name, vj anandha kannan, anandha kannan family, anandha kannan death, anandha kannan family photos, anandha kannan and kajal, anandha kannan wedding photos, vj anandha kannan wife name, anandha kannan date of birth, anandha kannan daughter name, sindhubaadh serial sun tv, sindhubaadh serial sun tv cast, ஆனந்த கண்ணன், விஜே ஆனந்த கண்ணன், சன் மியூசிக் ஆனந்த கண்ணன், ஆனந்த கண்ணன் குடும்பம், ஆனந்த கண்ணன் மகள், ஆனந்த கண்ணன் சிந்துபாத், வி ஜே ஆனந்த கண்ணன், parai isai aattam,
  மனைவியுடன் ஆனந்த கண்ணன்

  தமிழகத்தில் தோன்றிய கிராமியக் கலைகளை சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி அந்த நாட்டு மக்களுக்கும் பயிற்றுவித்து வந்தார். கிராமிய பயிற்சிகளை ‘ஆனந்த கூத்து’ என்ற அமைப்பின் மூலம் கற்பித்த ஆனந்த கண்ணன், தான் ஆத்மார்த்தமாக இதை செய்வதாகவும், அதனால் இந்த நொடியே தனது உயிர் பிரிந்தாலும் மகிழ்ச்சி தான் எனவும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்திருந்த நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

  VJ Anandha Kannan taught Tamil Nadu rural arts to Singapore peoples, Sun Music VJ Anandha Kannan passed away due to cancer, anandha kannan, anandha kannan news, anandha kannan age, anandha kannan wife, anandha kannan wife name, vj anandha kannan, anandha kannan family, anandha kannan death, anandha kannan family photos, anandha kannan and kajal, anandha kannan wedding photos, vj anandha kannan wife name, anandha kannan date of birth, anandha kannan daughter name, sindhubaadh serial sun tv, sindhubaadh serial sun tv cast, ஆனந்த கண்ணன், விஜே ஆனந்த கண்ணன், சன் மியூசிக் ஆனந்த கண்ணன், ஆனந்த கண்ணன் குடும்பம், ஆனந்த கண்ணன் மகள், ஆனந்த கண்ணன் சிந்துபாத், வி ஜே ஆனந்த கண்ணன், parai isai aattam,
  மனைவியுடன் ஆனந்த கண்ணன்

  இந்நிலையில் Bile Duct Cancer எனும் மிகவும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்தார் ஆனந்த கண்ணன். 48 வயதாகும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இதையறிந்த ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: