• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல தொகுப்பாளினிக்கு கொரோனா பாசிடிவ் - ரசிகர்கள் சோகம்!

பிரபல தொகுப்பாளினிக்கு கொரோனா பாசிடிவ் - ரசிகர்கள் சோகம்!

வி.ஜே.அக்‌ஷயா

வி.ஜே.அக்‌ஷயா

2019 ஆம் ஆண்டு இறுதியில் பவரத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு வேரியண்டுகளாக உருமாறி

  • Share this:
    சன் டிவியில் வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே அக்ஷ்யா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    நடிகர் சூர்யா, பிக்பாஸ் புகழ் ஷெரின், நடிகை நதியா உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை மூலம் குணமடைந்தனர். அந்தவகையில் தற்போது சன் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் வி.ஜே.அக்ஷையாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " தொடக்கத்தில் எனக்கு சிறிது மூச்சுத் திணறல் இருந்தது. உடனடியாக மருத்துவ ஆலோசனையை எடுத்துக் கொண்டு என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

    நான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், கொரோனா வைரஸ் என்னை இப்போது பாதித்திருக்கிறது. கொரோனா வைரஸ் முழுமையாக ஒழியவில்லை. எல்லா இடத்திலும் இருக்கிறது. வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள். முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். நான் இப்போது நலமாக இருக்கிறேன். உங்களின் வேண்டுதல்களுடன் விரைவில் மீண்டு வருவேன்" எனக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது உண்மை தான். கொரோனா வைரஸின் கோர முகம் இன்னும் முழுமையாக நம்மைவிட்டு சென்றுவிடவில்லை.

    2019 ஆம் ஆண்டு இறுதியில் பவரத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு வேரியண்டுகளாக உருமாறி, மக்களை வாட்டி வைத்து வருகிறது. தடுப்பூசி பயன்பாடு செயல்பாட்டுக்கு வந்தபின்னர் அதன் பரவல் விகதம் சற்று குறையத் தொடங்கியது. உயிரிழப்புகள் எண்ணிக்கை வீதமும் சரிந்தது. முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதா? என்று கேட்டால் ’இல்லை’என்று தான் கூற வேண்டும்.

    அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், 3வது டோஸ் செலுத்த வேண்டிய தேவை குறித்து ஆலோசிக்கவும் தொடங்கியுள்ளன. ஏனென்றால், சீனா, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த சில வாரங்களாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவலால், அந்நாட்டு மக்கள் மீண்டும் பீதியைடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சீனாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கும், உள்நாட்டுக்குள் பயணிப்பவர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களையும் சீனா வெளியிட்டுள்ளாது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு உலக நாடுகளிடையேவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக கொரோனா வைரஸ் அந்நாட்டில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவியது என்பது அனைத்து நாடுகளும் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் அந்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Akshayaa 👸 (@vjakshaya)






    இந்தியாவிலும் பரவலாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால், இன்னொரு கொடூரமான அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புடன், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: