• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனாவை தோற்கடித்து மீண்டும் வந்த சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. வில்லிக்கு வார்ம் வெல்கம்!

கொரோனாவை தோற்கடித்து மீண்டும் வந்த சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. வில்லிக்கு வார்ம் வெல்கம்!

சன் டிவி ரோஜா சீரியல்

சன் டிவி ரோஜா சீரியல்

அக்ஷயாவிற்கு ஏற்கனவே அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர். ரோஜாவில் அனுவாக மாறிய பிறகு இவரது வில்லத்தனமான நடிப்பால் இவருக்கான ரசிகர் வட்டம் மேலும் பெருகி உள்ளது.

  • Share this:
    மக்களின் ஆதரவை பெற்று பல ஆண்டுகளாக தமிழகத்தில் முன்னணி சேனலாக இருந்து வரும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் ரோஜா.

    இந்த சீரியலின் விறுவிறுப்பான கதை மற்றும் நடிகர்கள் காரணமாக ரசிகர்களின் வரவேற்பு அதிகம் இருப்பதால் சீரியல் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைமிங்கில் சன் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும். ரோஜா சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் பெங்களூருவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார்.ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் விசாகபட்டினத்தை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடிக்கிறார். வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வெங்கட் ரங்கநாதன் இந்த சீரியலில் அஸ்வின் என்ற கேரக்டரில் நடித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் ரோஜா சீரியலில் இருந்து விலகினார்.

    இந்த சீரியலில் முக்கிய வில்லி கேரக்டரில் அனுவாக பிரபல சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் நடித்து வந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகினார். இதை அடுத்து அனு கேரக்டரில் நுழைந்தார் விஜே அக்ஷயா. சன் டிவி-யில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா ஷோ மூலம் ஆங்கராக கலக்கி வந்த விஜே அக்ஷயாவிற்கு ஏற்கனவே அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர். ரோஜாவில் அனுவாக மாறிய பிறகு இவரது வில்லத்தனமான நடிப்பால் இவருக்கான ரசிகர் வட்டம் மேலும் பெருகி உள்ளது.

    இதனிடையே சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாவில், கோவிட் தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். "சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட கோவிட் டெஸ்ட்டில் தனக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும், தடுப்பூசி போட்டு கொண்டும் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    அது எப்படி சாத்தியம்? கர்ப்பமாக இல்லாமல் கர்ப்பகால ஃபோட்டோ ஷூட் நடத்திய ஷகீலா மகள் மிளா!

    எனினும் தடுப்பூசி வைரஸின் தீவிரத்தை குறைக்க உதவுவதாக கூறி, நான் விரைவில் முழுவதுமாக குணமடைவேன் என்று நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் மேலும் உங்களையும் கவனித்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள்" என்று அக்ஷயா தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டா மூலம் கூறி இருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Akshayaa 👸 (@vjakshaya)






    இதனிடையே தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதை குறிக்கும் விதமாக Anu is back #rojashoot தான் ஷூடிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்டுள்ள செல்ஃபியை என்று சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் அக்ஷயா. இதனை அடுத்து உடல்நலம் தேறி இருக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள், ரோஜா சீரியலில் முன்பை போலவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: