Home /News /entertainment /

செம்பருத்தி முடிந்த கையோடு விஜே அக்னி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

செம்பருத்தி முடிந்த கையோடு விஜே அக்னி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

விகே அக்னி

விகே அக்னி

செம்பருத்தி சீரியலுக்கு பிறகு மீண்டும் சீரியலில் லீட் ரோலில் அக்னி களம் இறங்குகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    செம்பருத்தி சீரியலில் கார்த்திக் விலகிய பின்பு ஆதிகடவூர் ஆதித்யாவாக நடித்த விஜே அக்னி அடுத்து சன் டிவி சீரியலில் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.

    ஜீ தமிழில் ஒளிப்பரப்பான செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சிரீயலாக இருந்து.  1000 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பான இந்த சீரியல் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்க மிக முக்கிய காரணம்  ஆதி - பார்வதி ஜோடி தான். சின்னத்திரையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. ஆதி பார்வதி கல்யாணம் எபிசோடுகள் டி.ஆர்.பியை எகிற வைத்தன. அந்த அளவிற்கு பீக்கில் ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகினார். இவர் விலகினாரா? விலக்கப்பட்டாரா? என்ற சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை.

    VJ Mahalakshmi marriage :கணவர் பற்றி மகாலட்சுமி சொன்ன வார்த்தைகள்!

    ஆஃபீஸ் சீரியல் மூலம் புகழடைந்த கார்த்திக், செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரை ஹீரோவாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது தான் அவரின் விலகல் நிகழ்ந்தது. இதனால் சீரியலில் அடுத்த ஆதி யார்? என்ற எதிர்பார்ப்பு மேலூங்கிய போது விஜே அக்னி நட்சத்திரம் அறிமுகம் ஆனார்.பிரபல யூடியூப் சேனலில் மூத்த ஆங்கராகவும், விஜேவாகவும் கலக்கி கொண்டிருந்தார் அக்னி. திடீரென்று நடிகராக அவதாரம் எடுத்தார்.

    மீண்டும் மைக்கை பிடிக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ்...அம்மணி பயங்கர ஹேப்பி!

    கார்த்திக் ரோலுக்கு மிகச் சிறந்த ரீப்ளேஸ்மெண்டாக இருந்த அக்னி தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்தார். என்ட்ரி ஆனதில் இருந்து சீரியல் முடியும் வரை தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார். செம்பருத்தி சீரியல் வெற்றி விழாவில் விஜய் ஸ்டைலில் கதை சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார். இந்நிலையில் செம்பருத்தி சீரியலுக்கு பிறகு மீண்டும் சீரியலில் லீட் ரோலில் அக்னி களம் இறங்குகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ள தொடரில் அக்னி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் ரச்சிதா கணவர் தினேஷ், பூவரசி ராதிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த சீரியல் சன் டிவியில் ப்ரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி