புதிய ரியாலிட்டி ஷோக்களை கொண்டுவருவதில் கைதேர்ந்த ஒரு சேனல் என்றால் அது விஜய் டிவி தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காமெடி, பாட்டு நிகழ்ச்சி, கேம் ஷோக்கள், சமையல் ஷோக்கள் என மக்களை கவர்ந்து வருகிறது இந்த சேனல். அந்த வகையில் தற்போது, மேலும் ஒரு புதிய ஷோவை கொண்டு வந்துள்ளது. விஜய் டிவி பிரபலங்களையும் அவர்களது அம்மாக்களையும் வைத்து தான் இந்த ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல விஜே-வான அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தான் தொகுத்து வழங்குகின்றனர்.
வீ.ஜே அர்ச்சனா பல ஆண்டுகள் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து, கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். இவருடைய மகளான சாராவும் ஒரு சில நிகழ்ச்சிகளை தன்னுடைய அம்மாவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் மகள் மற்றும் அம்மா இருவரும் இணைந்து ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். அவர்களது சேனலை மில்லியன் கணக்கானவர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். அர்ச்சனாவுக்கு எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு சாராவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்த நிலையில் அம்மா மகள் இருவரும் இணைந்து விஜய் டிவி-யில் "
தாயில்லாமல் நான் இல்லை" என்ற ஷோவை தொகுத்து வழங்குகின்றனர். மேலும் தற்போது நிகழ்ச்சி தொடர்பாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. அதில் விஜய் டிவி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் பிரபலங்கள் தங்கள் அம்மாக்களுடன் கலந்து கொண்டுள்ளனர். அதில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷும் தனது தாயுடன் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் தாய்மார்களுக்காக ஒரு பாடலையும் பாடுகிறார். அவரது பாடலை கேட்கும் அனைவரும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விடுகின்றனர். அதோடு ப்ரோமோ முடிவடைகிறது.
இந்த உருக்கமான ப்ரோமோ வீடியோ விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜே அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இவர் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கி அதன் மூலம் மிகப்பெரிய பிரபலமான தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஒரு ஆர்ஜேவாக தன்னுடைய கேரியரைத் தொடங்கிய அர்ச்சனா வீஜேவாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் ரியாலிட்டி மியூசிக் ஷோ மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக துவங்கினார். மேலும் அதே சேனலில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து நடத்தினர். பிறகு அர்ச்சனா விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.