• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அப்பாவான விஜய் டிவி பிரபலம்... குவியும் வாழ்த்துக்கள்!

அப்பாவான விஜய் டிவி பிரபலம்... குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி வினோத் பாபு

விஜய் டிவி வினோத் பாபு

"குழந்தை வின்சின் வந்துவிட்டான். ஆண் குழந்தை. மனைவியும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர்"

  • Share this:
    விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு, தனக்கு மகன் பிறந்திருப்பதையும், அவருக்கு வின்சின் என பெயர்சூட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் வினோத் பாபு. அடுத்து, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அடுத்ததாக, ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இரு மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அவர், விரைவில் தங்கள் குடும்பம் வளரப்போகிறது என தெரிவித்திருந்தார்.

    அந்த தகவலின் மற்றொரு அப்டேட்டையும் இப்போது கொடுத்திருக்கிறார். அதாவது வினோத் பாபு - சிந்து தம்பதிக்கு மகன் பிறந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான பதிவில், " குழந்தை வின்சின் வந்துவிட்டான். ஆண் குழந்தை. மனைவியும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர். இதனை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதனையடுத்து, வினோத் பாபு - சிந்து தம்பதிக்கு சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வினோத் பாபு அறிமுகமான ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ சீரியல் விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி நடித்தார். 405 எபிசோடுகளுடன் கடந்த மார்ச் மாதத்துடன் தொடர் நிறைவு பெற்றது. காதல், கலாட்டா, சண்டை என பரபரப்பாக இருந்தது. பாட்டியின் அரவணைப்பில் வளரும் ஹீரோ, அக்கா மற்றும் தாயின் அரவணைப்பில் வளரும் ஹீரோயின் தேஜஸ்வனியுடன் முதல் சந்திப்பில் இருந்தே மோதலில் ஈடுபடுகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vinoth babu (@vinothbabu_m)






    ஹீரோ வினோத் பாபு, யார் சொல்லுக்கும் கட்டுப்பட மாட்டார், பாட்டியைத் தவிர. எதிரும், புதிருமாகவே இருவரும் இருக்கும்போது தேஜஸ்வனியை பேரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்புகிறார் ஹீரோவின் பாட்டி. அவரின் விருப்பம் நிறைவேறியதா? என்பதைக் கொண்டு பல்வேறு திருப்பங்களுடன், சுவாரஸ்யமாக இந்தத் தொடர் நிறைவடைந்தது. இதனையடுத்து அவர், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் இப்போது நடித்து வருகிறார். இந்த சீரியலின் புரோமோ கூட தொடக்கத்தில் சர்ச்சைக்குள்ளானது.

    விஜய் டிவி-க்கு என்ன தான் ஆச்சு? நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ’பை’ சொன்ன ரச்சிதா

    இந்த புரோமோவைப் பார்த்த திருவள்ளுர் எஸ்.பி கட்டாயமாக தாலி கட்டினால் 3 வருஷம் ஜெயில் என டிவிட்டரில் எச்சரிக்கையும் செய்திருந்தார். இதன்பிறகு இந்த சீரியலின் புரோமோவை பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலுக்கு பெரிய விளம்பரம் கிடைத்தது. சர்ச்சையாக தொடங்கினாலும், இப்போது விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: