Home /News /entertainment /

vinayagar chaturthi : கலர்ஸ் தமிழில் களைக்கட்டும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்!

vinayagar chaturthi : கலர்ஸ் தமிழில் களைக்கட்டும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்!

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

vinayagar chaturthi movies : சூப்பர்ஹிட் திரைப்படங்கள், ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல், ஐங்கரன், கேஜிஎஃப் அத்தியாயம் 1 ஆகியவை ஒளிப்பரப்பாகவுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக கலர்ஸ் தமிழில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரைப்படங்கள் ஒளிப்பரப்படுகின்றன.

    புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் முதல் ஏராளமான திரைப்படங்கள் வரை நாள் முழுவதும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகவுள்ளன. பாக்யராஜ் தலைமையில் அரங்கேறிய சிறப்பு பட்டிமன்றத்தில் விஜே.ஆண்ட்ரூஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், ஸ்டாண்ட்-அப் மெர்வின், யூடியூபர் ஆர்ஜே.விக்னேஷ்காந்த், சசி லயா மற்றும் ஆர்ஜே.ஆனந்தி உட்பட அனைத்து கலந்து கொண்டு தங்களது வாதத்தை முன் வைக்கின்றனர்.

    சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

    பட்டிமன்றத்தைத் தொடர்ந்து, கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியு மற்றும் டெமி மூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சார்லிஸ் ஏஞ்சல் ஃபுல் த்ராட்டில் என்ற ஹாலிவுட் திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது. சார்லஸ் டவுன்சென்ட் டிடெக்டிவ் ஏஜென்சியின் (பேரிமோர், டயஸ் மற்றும் லியு) மூன்று பேரின் துப்பறியும் கதை தான் இந்த ஏஞ்சல்ஸ். அதற்கு அடுத்து பேக்-டு-பேக் சூப்பர்ஹிட் திரைப்படங்கள், ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல், ஐங்கரன், கேஜிஎஃப் அத்தியாயம் 1 ஆகியவை ஒளிப்பரப்பாகவுள்ளன.

    பின்பு துல்கர் சல்மான் நடித்த ஹே சினாமிகா திரைப்படம் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இப்படத்தில் அதிதி ராவ் ஹைடாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தொடர்ச்சியாக, இரவு 9:30 மணிக்கு ஆதி பினிசெட்டி மற்றும் ஆகாங்ஷா சிங் நடித்த கிளாப் திரைப்படமும் டெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன. இந்த விநாயகர் சதுர்த்தியை கலர்ஸ் தமிழுடன் இணைந்து கொண்டாடுங்கள்.

    அப்பவே விஜய் டிவி பிரபலத்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அதிதி.. ஃபோட்டோ உள்ளே!

    இதுக் குறித்து பேசிய லர்ஸ் தமிழ் வணிகத் தலைவர் திரு.ராஜாராமன் "கணேஷ் சதுர்த்தி அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பெரிய நாள், மிகவும் மங்களகரமானது. மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவழிக்க, சிந்தனையைத் தூண்டும் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் நாள் முழுவதும் இடைவிடாத பொழுதுபோக்கை உங்களுக்கு வழங்க பல்வேறு தரமான திரைப்படங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

    ஆகஸ்ட் 31 புதன்கிழமை கலர்ஸ் தமிழில் டியூன் செய்வதன் மூலம், இந்த விநாயக சதுர்த்தியின் போது, ​​உங்கள் வீடுகளில் அதிரடி, உற்சாகம் மற்றும் பொழுதுபோக்குடன் கூடிய பிரமாண்டமான கொண்டாட்டத்தை அனுபவிக்கவும். சேனல் அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து DTH இயங்குதளங்களிலும் கிடைக்கிறது - Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H ( CHN எண் 553).

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி