விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சிரீஸ் திரைப்படமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாத் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரியில் விலங்கு வெப் சிரீஸ் வெளியாகியிருந்தது. ஜீ5 தளத்தில் வெளியான இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திருச்சி வேம்பூர் எனும் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. பரிதி. தனது மனைவியின் பிரசவத்துக்காக விடுமுறை எடுக்க இருக்கும் நிலையில், பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரிதிக்கு வருகிறது. இறந்தது யார் என விசாரித்து கொண்டிருக்கும்போதே சடலத்தில் இருந்த தலை காணாமல் போகிறது. தலையின் தேடலுக்கு இடையில் அப்பகுதி எம்எல்ஏவின் மைத்துனரும் கொலையாகி கிடக்கிறார். இந்த இரண்டு கொலைகளும் ஏன் நடந்தன, கொலையாளி யார், அந்த தலை எப்படி காணாமல் போனது என்ற கேள்விகளுக்கு விடையை தேடுவதுதான் 'விலங்கு' வெப் சீரிஸின் கதையும் களமும். மொத்தம் 7 எபிசோட்களாக வெளியாகி நிறைய பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
View this post on Instagram
பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு
இந்நிலையில் தற்போது இந்த சிரீஸ் திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஆம், வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு விலங்கு திரைப்படத்தை சின்னத்திரையில் கண்டு ரசிக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Zee tamil