Home /News /entertainment /

பாரதி - கண்ணம்மாவை பிரிக்க வரும் வெண்பாவின் அம்மா! சீரியலில் திடீர் ட்விஸ்ட்

பாரதி - கண்ணம்மாவை பிரிக்க வரும் வெண்பாவின் அம்மா! சீரியலில் திடீர் ட்விஸ்ட்

பாரதி கண்ணம்மா  வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மாவாக, ஷர்மிளா ரோலில் நடிப்பவர் கடலோர கவிதைகள் ரேகா.

    பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்டாக வில்லி வெண்பாவின் அம்மா ரோலில் நடிகை ரேகா சீரியலில் என் ட்ரி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லை பாரதி - வெண்பா திருமணத்தை நடத்தி வைக்க போறதே இவர் தானாம்.

    கண்ணம்மா சீரியலில் எதாவது ஒரு திருப்பத்தை தந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குனர். பீக்கில் சென்று கொண்டிருந்த சீரியலை இப்போது பெரிதாக யாரும் ஆர்வத்துடன் பார்ப்பதில்லை. அதற்கு காரணம், கண்ணம்மாவின் மாற்றம் என்று சொன்னாலும், கதையில் வேற எந்த புதிய திருப்பமும், மாற்றமும் வராமல் இருப்பது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் புது சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல், சுந்தரி சீரியல்கள் இப்போது முக்கியமான திருப்பத்தில் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

    இதையும் படிங்க..இந்த அதிர்ச்சியை எப்படி தாங்க போகிறார் சஹானா? கலங்கி நிற்கும் சிவா!

    இதை புரிந்து கொண்ட இயக்குனர், சீரியலில் அதிரடியாக 2 கதாபாத்திரங்களை புகுத்தியுள்ளார். ஏற்கெனவே, சவுந்தர்யா - வேணுவின் கல்லூரி நண்பராக விஜய் என்ற ரோல், சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளது, இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக வெண்பாவின் அம்மா சீரியலில் வரப்போகிறார். வெண்பாவின் அம்மாவாக, ஷர்மிளா ரோலில் நடிப்பவர் கடலோர கவிதைகள் ரேகா. இவரின் என்ட்ரி குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    2 நாட்களுக்கு முன்பு, வெண்பாவுக்கு ஒரு நம்பரில் இருந்து ஃபோன் வந்தது. அதை எடுக்க முடியாமல் வெண்பா தவித்தார். இப்படி இருக்கையில், அந்த நம்பர் யாருடையது என சாந்தி வெண்பாவை கேள்வி கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் வெண்பா முழித்தார். அவர் வேற யாருமில்லை வெண்பாவின் அம்மா ஷர்மிளா. தான். இப்போது வெளியாகி இருக்கும் புரமோவில், ஷர்மிளா பாரதியின் ஆஸ்பிட்டலுக்கு சென்று தனது மகள் வெண்பாவுக்கும் பாரதிக்கும் கல்யாண்ம் செய்வது பற்றி பேசி, பாரதிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தருகிறார்.

    கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் இப்படியொரு முடிவா? ரேஷ்மா பற்றி பரவும் தகவல்!

    புது என்ட்ரியாக வந்து இருக்கும் விஜய் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க இப்போது அதிரடி ட்விஸ்டாக வெண்பாவின் அம்மா இருவரையும் நிரந்தமரக பிரிக்க பிளான் செய்கிறார். அடுத்து என்ன நடக்கும் ? என்பது வரும் வார எபிசோடில் தெரிய வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி