Home /News /entertainment /

பாரதி செய்த காரியம்..ஹேமாவை பிரிக்கும் வில்லி வெண்பா!

பாரதி செய்த காரியம்..ஹேமாவை பிரிக்கும் வில்லி வெண்பா!

பாரதி

பாரதி

பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்.

    பாரதி செய்த செயலால் கண்ணம்மாவுக்கு புது பிரச்சனை வந்துள்ளது. வில்லி வெண்பாவின் அடுத்த ஆட்டத்தில் ஹேமா பலியாகிவிட்டார். அதாவது ஹேமாவைவும் கண்ணம்மாவையும் பிரிக்க புது முயற்சியில் இறங்கிவிட்டார். இன்றைய எபிசோடில் என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்.

    பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில், லட்சுமியை வீட்டுக்கு அழைத்து வந்த பாரதி, கண்ணம்மாவிடம் சண்டை போட்டு விட்டு கடைசியாக கிளம்பும் போது லட்சுமிக்கு சாக்லெட் வாங்கி தந்தார். இந்த காட்சியை கண்ணம்மா தனது ஃபோனில் ஃபோட்டோ எடுத்தார். அதே போல் இந்த சீனை மாயாண்டி பார்த்து வெண்பாவிடம் போட்டு கொடுக்கிறார். வெண்பாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. இதை தாங்கி கொள்ள முடியாமல் வழக்கம் போல் சாந்தியிடம் புலம்பி தீர்க்கிறார். அப்போது தான் சாந்தி ஒரு யோசனை கொடுக்கிறார். கண்ணம்மாவையும் ஹேமாவையும் பிரித்து, ஹேமா மனதில் இடம் பிடித்து குழந்தையை அடிக்கடி இங்கே வரும்படி செய்யுங்கள் என்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்த உடனே களத்தில் இறங்குகிறார் வெண்பா.

    இதையும் படிங்க.. சந்திரலேகா சீரியலில் இனி நான் இல்லை... விலகிய முக்கிய பிரபலம்!

    இந்த பக்கம், ஹேமா மனதில் பாரதிக்கு 2வது கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்ற எண்ணம் வந்ததை பற்றி சவுந்தர்யா, வேணு, அகில், அஞ்சலி என மொத்த குடும்பமும் புலம்பி தீர்க்கின்றனர். லட்சுமியோ அப்பா ஃபோட்டோவை தேடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். அப்போது கண்ணம்மா ஃபோனில் பாரதி புகைப்படம் இருப்பதை பார்க்கிறார். ஆனால் கூட லட்சுமிக்கு அவர் தான் அப்பாவாக இருப்பாரோ என்ற சந்தேகம் கொஞ்சம் கூட வரவில்லை. இப்படி இருக்கையில் மறுநாள் ஸ்கூலுக்கு கண்ணம்மா லஞ்ச் எடுத்து கொண்டு  போகிறார்.

    அந்த நேரம் பார்த்து வெண்பாவும் ஹேமாவுக்கு லஞ்ச் எடுத்துக் கொண்ட போக இருவரும் எதிர் எதிரே  பார்த்து முறைத்துக் கொள்கின்றனர். இங்கு தான் ட்விஸ்டே. எப்போதுமே ஹேமாவுக்கு வெண்பாவை பார்த்தால் பிடிக்காது. ஆனால் இன்று ஹேமாவை கவர, கையில் பிரியாணி உடன் வருகிறார் வெண்பா. குழந்தைக்கு பிரியாணி வாசனை வர, ஹேமா கண்ணம்மா சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெண்பாவுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிடுகிறார். இதை பார்க்கும் கண்ணம்மாவுக்கு வெறுப்பு வருகிறது.

    இதையும் படிங்க.. மறுபடியும் அழகான பெண் குழந்தை.. மகிழ்ச்சி வெள்ளத்தில் சன்டிவி சீரியல் பிரபலம்!

    ஒருநாள் பாரதி, கண்ணம்மா வீட்டுக்கு போய் லட்சுமியிடம் அன்பை காட்டியதற்கு வெண்பா ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வரும் நிலைக்கு இறங்கிவிட்டார். கண்ணம்மாவையும் ஹேமாவையும் பிரிக்கும் வில்லி வெண்பாவின் திட்டம் கைக்கூடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி