ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!

விக்ரமன் - அசீம்

விக்ரமன் - அசீம்

உண்மையின் பக்கம் நிற்பதற்கு எதற்கு தயக்கம்? என அறம் வெல்லும் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விக்ரமன் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் தமிழ் 6-ன் வெற்றியாளர் யார் என்பது தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கும் அறிமுகமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

பத்திரிக்கையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விக்ரமன், தனது கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல் எடுத்து வைப்பதோடு, கிடைக்கும் கேப்பில் எல்லாம் சமூக நீதி, பெண்ணுரிமை, பகுத்தறிவு சிந்தனைகளை பேசி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். சீரியல் நடிகர் அசீம், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவது, மற்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது, எந்த ஒரு சாதாரண உரையாடலையும் சண்டையாக மாற்றுவது என நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்கு உதவி வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் 6 இறுதி கட்டத்தை நெருங்கியதையடுத்து விக்ரமன் - அசீம் இருவரில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரமனின் அரசியல் நிலைபாடுகளில் எதிர் கருத்து கொண்டவர்கள், அசீமுக்கு ஆதரவாக இணையத்தில் களமாடுகின்றனர். இந்நிலையில் விக்ரமன் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவருக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு, ஒருபக்கம் ஆதரவையும், மறுபக்கம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்தப் புயல் ஓய்வதற்குள் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவரை தனது தாய்மாமா என அசீம் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது தான். ஒரு சாதாரண பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு எம்.பி-யும், எம்.எல்.ஏ-வும் வாக்கு கேட்பதா என அசீம் ஃபேன்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், உண்மையின் பக்கம் நிற்பதற்கு எதற்கு தயக்கம்? என அறம் வெல்லும் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விக்ரமன் ரசிகர்கள்.

இந்நிலையில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் வனிதா விஜயகுமார், ”இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யுமான ஒருவர், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்க தனது கட்சி உறுப்பினர்களிடம் எப்படி சொல்லலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்ட மாணவர் - வைரலாகும் வீடியோ

அதே நேரத்தில் விக்ரமன் தனது முந்தைய அரசியல் பேச்சிற்காக பிக் பாஸ் டைட்டிலை வெல்லக் கூடாது என சில சாதிக்கட்சிகள் சதி வேலையில் இறங்கிவிட்டதால், அவர் சார்ந்துள்ள கட்சித் தலைவரே விக்ரமனுக்கு நேரடியாக தனது ஆதரவை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிப்பதாக பிக் பாஸ் அனலிஸ்ட் பிரவீன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அறம் வென்று அநீதி வீழுமா என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்த்ருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aloor shanawas, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Thirumavalavan, Vanitha Vijayakumar