• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புதிய சீரியலில் நடிக்கும் நடிகர் விக்ரம் ஸ்ரீ - ப்ரோமோ வெளியிட்டு அறிவிப்பு!

புதிய சீரியலில் நடிக்கும் நடிகர் விக்ரம் ஸ்ரீ - ப்ரோமோ வெளியிட்டு அறிவிப்பு!

விக்ரம் ஸ்ரீ

விக்ரம் ஸ்ரீ

விக்ரம் ஒரு திறமையான நடிகர் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார். அவர் சமீபத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொண்டார்.

  • Share this:
சீரியல் நடிகர் விக்ரம் ஸ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். அவர் இதற்கு முன் சிவா மனசுல சக்தி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஸ்ரீ தமிழ் மட்டுமின்றி பல கன்னட சீரியல்களிலும் நடித்து அங்கும் பாப்புலரான நடிகராக இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் அன்பே சிவம் சீரியலில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை விக்ரம் ஸ்ரீ வெளியிட்டுள்ளார். தனது புதிய நிகழ்ச்சியான அன்பே சிவம் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளதாகவும், இந்த புதிய திட்டம் குறித்து உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வணக்கம் நண்பர்களே, எங்கள் புதிய சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது, இந்த நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#vikramshri #AnbeSivan #new #promotion #serial #indiantelly #instagram #excited #filmaking (sic)” என்ற ஹேஷ்டேகில் டேக் செய்து வீடியோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அந்த வீடியோவிற்கு லைக்ஸ் போட்டுள்ளனர்.

இதனிடையே விக்ரம் ஒரு திறமையான நடிகர் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார். அவர் சமீபத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொண்டார். தனது ஜிம்னாஸ்டிக் பயிற்சியின் போது எடுத்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ள, விக்ரம் “ஸ்டண்ட் வேலை செய்வது ஆபத்தானது, ஆனால் இதனை நான் ரசிக்கிறேன், இது மிகவும் நன்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

#vikramshri #stunts #gym #gymnastic #instagood #insta #reelsinstagram #workout #film #making memories #acting #action #indiantelly #risk (sic)” என்ற ஹேஷ்டேக்குகளையும் இந்த வீடியோவில் சேர்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய சீரியலில் வர உள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக விக்ரம் கூறியுள்ளார். அன்பே சிவம் சீரியலில் இவருடன் ரக்ஷா ஹோலா, கிருத்திகா லட்டு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Also read... இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்ற ஷிவாங்கி - ரசிகர்களுக்கு நன்றி!

ரக்ஷா ஹோலா இதற்கு முன்னதாக நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனில் ஹீரோயினாக நடித்து அசத்தியவர். இந்த சீரியலின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார். இந்த சீரியல் கைவிடப்பட்டதை அடுத்து சிறிய பிரேக்கில் இருந்த ரக்ஷா, தற்போது விக்ரமிற்கு ஜோடியாக அன்பே சிவம் சீரியலில் நடிக்க உள்ளார். நடிகை ரஷாவும் சீரியலின் ப்ரோமோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: