விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் விக்ரம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படமான '‘கைதி’ திரைப்படத்தை விஜய் டிவி இன்று டெலிகாஸ்ட் செய்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் படைப்பில் ‘விக்ரம்’திரைப்படம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியாகும் தகவலின் படி, படம் பிளாக் பஸ்டர் என்ற கமெண்டுகளை பார்க்க முடிகிறது. அதே போல் படம் குறித்து பாசிடிவ் விமர்சனங்களும் ஒருபக்கம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ட்ரீட் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை 3 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், இளைஞர்களின் ஃபேவரெட் இயக்குனர் வரிசையில் இணைந்துள்ளார்.
"கைதி"யை பார்த்துவிட்டு "விக்ரம்" படத்தை பாருங்கள்... ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சிறந்த இயக்குனர் லிஸ்டில் லோகேஷ் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் லோகேஷின் மற்றொரு சிறந்த படைப்பு தான் கார்த்தி நடித்த கைதி. இந்த படத்திற்கு விக்ரம் படத்திற்கும் நிறைய லிங்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல் நேற்றைய தினம், லோகேஷ் தனது ரசிகர்களுக்கு விடுத்த அன்பு வேண்டுகோள், ”கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் உலகிற்கு வாருங்கள் ”
Vikram : வெளியானது விக்ரம்..! கமல் ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டம்
எனவே, இதுவரை கைதி படத்தை பார்க்காதவர்கள் அல்லது ஏற்கெனவே பார்த்தவர்கள் மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பார்த்தால் விக்ரம் படத்தின் கதை இன்னும் நன்றாகவே புரியலாம். கைதி படத்தை நீங்கள் ஆன்லைனில் பார்க்கலாம். அதை தவிர இன்று 1.30 மணிக்கு விஜய் சூப்பர் சேனலிலும் கைதி படம் ஒளிபரப்பாகிறது.
இன்று விக்ரம் படம் ரிலீஸ் என்பதால், லோகேஷ் ஃபேன்களை மகிழ்விக்க விஜய் டிவி, விஜய் சூப்பர் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு கைதி படத்தை டெலிகாஸ்ட் செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.