Home /News /entertainment /

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியனாக நடிப்பது இவரா?

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியனாக நடிப்பது இவரா?

ஆர்யன் - விகாஷ் சம்பத்

ஆர்யன் - விகாஷ் சம்பத்

பாக்கியாவின் மூத்த மகன் செழியனாக நடித்து வந்த ஆர்யன் பாக்கிய லட்சுமி தொடரில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பாக்கியலட்சுமி சீரியலில் ஆர்யனுக்கு பதில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலம்

    பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாக்யா எப்படி தாங்கிக் கொள்வாள், ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொள்வானா? என்ற ரீதியில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது.

    Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய செழியன்?

    இதற்கிடையே பாக்கியாவின் மூத்த மகன் செழியனாக நடித்து வந்த ஆர்யன் பாக்கிய லட்சுமி தொடரில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவருக்கு பதில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடிகர் விகாஷ் சம்பத் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவர் ஏற்கனவே விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ராஜபார்வை சீரியலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி