சென்னை மக்களை நம்பி வந்து ஜெயித்தேன்.. விஜய் டிவி சுனிதாவின் வெற்றி பயணம்!

விஜய் டிவி சுனிதா

“என்னை வாழ வைத்தது தமிழ் தான்” என்று அடிக்கடி சுனிதா சொல்வதுண்டு.

 • Share this:
  vijaytv sunitha cook with comali : விஜய் டிவி சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். இவர் தமிழை நம்பி வந்து ஜெயித்த கதை உங்களுக்கு தெரியுமா?

  விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா. வட இந்திய பெண்ணான இவர், இந்த நிகழ்ச்சி மூலம் பட்டித்தொட்டி எங்கு ஃபேமஸ் ஆனார். நடன கலைஞரான இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். வெறிக்கொண்டு நடனம் ஆடுவார்.

  விஜய் டிவியில் ஒளிப்பரபான பல்வேறு நடன நிகழ்ச்சியில் இவரின் நடன திறமை வெளிவந்துள்ளது. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வாங்- சுனிதா ஜோடி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஃபேவரெட் கப்பில். பாய்ஸ் vs கிளேஸ் நிகழ்ச்சியில் சுனிதாவை சிவாகார்த்திகேயன் கலாய்த்து தள்ளும் வீடியோக்கள் இப்போதும் யூடியூப்பில் வைரல் தான். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் செம்ம ஜாலியாக இருக்கும். தனக்கே தெரியாமல் சுனிதா வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைத்துகொண்டிருப்பார்.

  ரெட் கவுனில் சுனிதா


  சுனிதாவின் முதல் வெற்றி என்றால், அது ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் சின்னத்திரை நிகழ்ச்சியாக உருவெடுத்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். புகழ் உடன் சேர்ந்து இவர் செய்த அலப்பறைகள் எல்லாம் படு பயங்கரம். புகழ், சிவாங்கிக்கு அடுத்ததாக, ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக வலம் வந்தவர் சுனிதா. “என்னை வாழ வைத்தது தமிழ் தான்” என்று அடிக்கடி சுனிதா சொல்வதுண்டு.

  லாக்டவுனில் Sunita Xpress என்ற யூடியூப் சேனலை தொடங்கி தனது டான்ஸ் , மேக்க அப் ரொட்டின், ஃபன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த சேனலுக்கு இதுவரை நான்கரை லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய வெற்றியை சுனிதா அவ்வளவு எளிதாக அடைந்திடவில்லை. எண்ணற்ற போராட்டம், தொடர் முயற்சி. வட இந்தியாவில் இருந்து வந்து, இங்கு ஜெயித்து இப்போது இங்கே செட்டிலும் ஆகிவிட்டார் சுனிதா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: