Home /News /entertainment /

அந்த விஜய் டிவி சீரியல் முடிய போகிறதா? வருத்தத்தில் ரசிகர்கள்!

அந்த விஜய் டிவி சீரியல் முடிய போகிறதா? வருத்தத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

இதற்கு பதிலாக கோகுலத்தில் சீதை தொடர் புகழ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ என்ற தொடரும் ஒளிப்பரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் டிவி யில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை இதற்கு பதில் விஜய் டிவியில் புத்தம் புதிய சீரியல் டெலிகாஸ்ட் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    விஜய் டெலிவிஷனில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சில சீரியல்கள் கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஒளிபரப்பாக துவங்கியவை. அந்த வகையில் பாவம் கணேசன் சீரியல் கடந்த 2020 முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்கென்றே வாழும், உழைக்கும் இளைஞன் பற்றிய கதை  தான் "பாவம் கணேசன்". விஜய் டிவி-யின் கலக்கப் போவது யாரு புகழ் நவீன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக குணா ரோலில் நேகா கவுடா நடிக்கிறார்.

    பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில் சந்தோஷமான நாள்.. வாழ்த்துக்களை ஷேர் செய்யும் ரசிகர்கள்!

    கணேசனாக நடிக்கும் நவீன் தந்தை இல்லாத தனது குடும்பத்தை தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார். வாட்டர் கேன் சப்ளை, பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வரை கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு ஒரு தம்பி, 2 தங்கை மற்றும் அக்கா அடங்கிய பெரிய குடும்பத்தை காப்பாற்றுகிறார். தற்போது கதைப்படி நவீனின் கடைசி தங்கை நித்யாவுக்கு குணாவின் தம்பி பிரவீன் தாலி கட்டிவிட்டார். இந்த தாலியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கணேசனின் அம்மா கூறிவிட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்களும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் பாவம் கணேசன் சீரியல் முடிக்கப்படும் என தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு பதிலாக கோகுலத்தில் சீதை தொடர் புகழ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ என்ற தொடரும் ஒளிப்பரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி