• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி சீரியலுக்கு அடுத்த சோதனை.. பிரபல சீரியல் நடிகை திடீர் விலகல்!

விஜய் டிவி சீரியலுக்கு அடுத்த சோதனை.. பிரபல சீரியல் நடிகை திடீர் விலகல்!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

புதிய மீனாட்சியாக நடிக்க இருப்பது யார் என்று பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

  • Share this:
    காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நடிகையும் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

    சின்னத்திரை என்றாலே சீரியல்கள் தான். சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல் பல்வேறு சேனல்களும், பல தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. ஒவ்வொரு சீரியலுக்குமே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதற்கான காரணம் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தான். ஆனால், பல காரணங்களுக்காக நடிக நடிகைகளால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விடுகிறது.

    பெரும்பாலான நடிகர் நடிகைகள் சீரியலின் பாத்திரமாகவே மாறி விடுகின்றனர். அதேபோல சில காரணங்களுக்காக ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போய்விடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. பல மாதங்களாக ஒரு பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அல்லது நடிகை திடீரென்று சீரியலில் இருந்து விலகிச் சென்று அவருக்கு பதிலாக மற்றொருவர் நடிப்பது ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய ஏமாற்றத்தை உருவாக்குகின்றது.

    இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு சீரியலில் இரண்டு நடிகர்கள் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கிய நிலையில் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. காற்றுகென்ன வெளி தொடரின் நாயகன் விஜய் டிவி ரசிகர்களுக்கு புதியவரல்ல. இந்தத் தொடரல் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்ய‌ தர்ஷன் நடித்து வந்தார்.

    ஆனால், அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தன.சூர்யா பாத்திரத்தில், ஒரு புதுமுக நடிகரை விஜய் டிவி அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்திகள் வந்துள்ளன. சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சுவாமிநாதன் காற்றுக்கென்ன வேலியில் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. சூர்யா தர்ஷனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர்.

    சூர்யாவின் இடத்தை சுவாமிநாதன் நிரப்புவாரா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும். இப்போது சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நடிகையும் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். ஏற்கனவே இதைப் பற்றி செய்தி கசிந்த நிலையில் புதிய மீனாட்சியாக நடிக்க இருப்பது யார் என்று பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

    காற்றுக்கென்ன வேலியில் மீனாட்சியாக நடிக்க இருப்பவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுஜாதா பஞ்சு தான். சுஜாதா பஞ்சு ஒரு மேடை நாடக நடிகை. இவர் பல சீரியலில் நடித்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பேரழகி சீரியலில் நாயகனின் அம்மாவாக நடித்து சின்னத்திரையில் புகழ் பெற்றவர். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: