சின்னத்திரை அம்மாக்களில் பெஸ்ட்.. 14 வயதில் திரைப்பயணத்தை தொடங்கிய கணேசன் அம்மா!

சின்னத்திரை நடிகை அனிலா

தனியாக நடனப்பள்ளியை ஆரம்பித்து வெற்றிக்கரமாக நடத்தி வருகிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஒளிப்பரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான அனிலா ஸ்ரீகுமார் ஒரு நடனப்பள்ளி ஆசிரியர் தெரியுமா?

  கேரளாவைப் பிறப்பிடமாக கொண்ட இவர் தனது 14 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். எண்ணற்ற மலையாள படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை இவர் ஒரு பாரம்பரிய நடன ஆசிரிய. மூன்று வயதில் கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக்கொள்ள தொடங்கியவர் இன்று 25 மாணவர்களின் டான்ஸ் மாஸ்டர் ஆவர். தனியாக நடனப்பள்ளியை ஆரம்பித்து வெற்றிக்கரமாக நடத்தி வருகிறார்.

  also read .. சின்னத்திரையின் வெற்றி நாயகி சுஜிதா!

  மலையாளத்தில் இவரின் முதல் திரைப்படம் சர்கம். அதன் பின்பு அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரும்பாலும் இவருக்கு அம்மா ரோல் தான் அமைவது வழக்கம். காரணம் அந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பில் தூள் கிளப்புவார். பின்பு மலையாள சீரியல்களிலும் முகம் காட்டத்தொடங்கினார். பெரிய திரையில் விட சின்னத்திரையில் இவரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காரணம் அவரின் இயல்பான தோற்றமும் நடிப்பும் தான்.

  கணவர் மற்றும் குடும்பத்தினருடன் அனிலா


  தமிழில் சின்னதம்பிக்கு முன்பு களத்து காடு என்ற சீரியலில் நடித்தார். ஆனால் அந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது எனவே தமிழில் இவரின் சின்னத்திரை அறிமுகம் சின்னதம்பி சீரியல் தான். கிராமத்து அம்மாவாக, சிட்டி மருமகளை விரும்பாத மாமியாராக இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின்பு காற்றின் மொழி, இப்போது பாவம் கணேசனில் அம்மா சொர்ணமாக சின்னத்திரையில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வெள்ளித்திரையிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: