Home /News /entertainment /

எத்திராஜ் காலேஜ் மாணவி டூ லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆங்கர்.. தட்டி தூக்கிய விஜய் டிவி பிரியங்கா !

எத்திராஜ் காலேஜ் மாணவி டூ லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆங்கர்.. தட்டி தூக்கிய விஜய் டிவி பிரியங்கா !

விஜய் டிவி பிரியங்கா

விஜய் டிவி பிரியங்கா

விஜய் டிவி பிரியங்காவின் முதல் நிகழ்ச்சியே மாகாபா ஆனந்துடன் சினிமா காரம் காப்பி மற்றும் ஒல்லி பெல்லி.

  எத்திராஜ் காலேஜ் மாணவி டூ டாப் ஆங்கர் லிஸ்டில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆங்கராக உயர்ந்து இருக்கும் விஜய் டிவி பிரியங்காவின் பிறந்த நாள் ஸ்பெஷல்.

  விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா என்றாலே அவரின் சிரிப்பு தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். தன்னை தானே கலாய்த்துக் கொண்டு கன்டெண்ட் வழங்கும் மகத்தான ஆங்கர். இவருடன் மா.கா.பாவும் சேர்ந்தால் போதும் அந்த நிகழ்ச்சி பாட்டு நிகழ்ச்சி என்பதே பலருக்கும் மறந்து விடும். போட்டியாளர்கள் தொடங்கி நடுவர்கள் வரை அனைவரும் kpy சாம்பியன் நிகழ்ச்சி போல் மாற்றிவிடுவார்கள். வெறும் சூப்பர் சிங்கர் மட்டுமில்லை பிரியங்கா ஆங்கரிங் செய்யும் அனைத்தும் நிகழ்ச்சிகளிலும் இதே நிலை தான். இது தான் பிரியங்காவின் ஸ்பெஷல் டேலண்ட் என்று கூட சொல்லலாம்.

  அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

  சொல்லப்போனால் டிடிக்கு பிறகு விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் அது பிரியங்கா தான். மிகவும் ஜாலியான கேரக்டர். யார் கலாய்த்தாலும் சரி அதை டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்பவர். இது உண்மை தான் என்பதை நிரூப்பிக்கும் விதமாக தான் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். ஆனால் அங்கே போனதுக்கு பிறகு தான் தெரிந்தது அவர் மிகவும் எமோஷனல் என்று. அடிக்கடி பிரியங்கா அழுததையும் பார்க்க முடிந்தது. இந்த பிக் பாஸ் ஷோ பிரியங்காவும் பாசிடிவ் பிளஸ் நெகடிவ் என இரண்டையும் சரமாரியாக பெற்று தந்துள்ளது.

  ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

  நம்ம சென்னை பொண்ணுப்பா என்று பிரியங்காவை ரசிகர்கள் சொன்னாலும் அது உண்மையில்லை. பிரியங்கா பெற்றோர் முதலில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள். பூர்விகம் என்றால் பிரியங்காவுக்கு மகாராஷ்டிரா தான். ஆனால் அவரின் பெற்றோர்கள் சென்னையில் செட்டில் ஆகி விட்டதால் பிரியங்காவும் சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.
  எத்திராஜ் காலேஜில் படிக்கும் போதே ஆங்கரிங்கில் பயணத்தை தொடங்கியவர் சன் டிவியில் குட் மார்னிங் ஷோவில்  தொகுப்பாளராக இருந்தார். சன் டிவி மட்டுமா, சுட்டி டிவியில் கூட குழந்தைகளுடன் சேர்ந்து ஷோ செய்து இருக்கிறார். அப்போது தான் கெரியரில் நெக்ஸ்ட் ஸ்டேஜ் செல்ல விரும்பியவர், விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார். இப்போது அங்கையே நாற்காலி போட்டு ஸ்ட்ராங்காக அமர்ந்துவிட்டார்.
  இவரின் முதல் நிகழ்ச்சியே மாகாபா ஆனந்துடன் சினிமா காரம் காப்பி மற்றும் ஒல்லி பெல்லி. கெரியரில் ஹிட் அடித்த பிரியூவுக்கு
  முதல் திருமண வாழ்க்கை கைக்கொடுக்கவில்லை. பின்பு சூப்பர் சிங்கர் பிரவீனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிக் பாஸில் அவரை பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. அதுவே மிகப் பெரிய சர்ச்சையாக கேட்கப்பட்டது அதற்கு பிறகு பதில் சொல்கிறேன் என கூறிவிட்டார்.

  அதுமட்டுமில்லை யூடியூப் சேனலை தொடங்கிய அதன் மூலம் பல லட்சங்களில் ரெவன்யூ பார்க்கிறார். பல ஆண்டுகளாக விஜய் டிவியில் இருக்கும் பிரியங்காவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் சமீபத்தில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. சின்னத்திரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஃபேவரெட் ஆங்கராக இருக்கும் பிரியங்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Anchor Priyanka, Vijay tv

  அடுத்த செய்தி