• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் குழந்தைகளால் வரும் பிரிவு.. குணம் மாறும் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் குழந்தைகளால் வரும் பிரிவு.. குணம் மாறும் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கயல் பாப்பாவை யாரும் கவனிக்கவில்லை என மீனாவுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் குழந்தை மீது குடும்பத்தின் கவனம் செல்லுவதால் குட்டி அண்ணி மீனாவின் குணம் மறுபடியும் மாற தொடங்கி விட்டது.

    விஜய் டிவியில் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" என பாடும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  வில்லி கதாபாத்திரம் மற்றும் பழிக்கு பழி வாங்கும் கதைக்களம் ஆகியவை இல்லாமல் அண்ணன் தம்பிகள் ஒன்றாக சேர்த்து கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையை நடத்தி வரும் கதைக்களம் தான் இந்த சீரியல். இந்த சீரியல் ஆரம்பமானதில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.கணவனின் தம்பிகளை தன் பிள்ளைகளாகவே என்னும் பாசக்கார அண்ணி, அண்ணா மற்றும் அண்ணியை தாய், தந்தையாக மதிக்கும் தம்பிகள் என பாச பிணைப்பில் மற்ற சீரியலைகளை பின்னுக்கு தள்ளியது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

    அவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து மக்கள் பலரும் இப்படியெல்லாம் இல்லையே என வருத்தப்படும் அளவிற்கு சீரியல் நல்ல பெயரை எடுத்துள்ளது. இந்த சீரியல் வந்த பிறகு இதற்கு போட்டியாக சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஒரு சீரியல் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் பல காரணங்களால் அந்த சீரியல் சீக்கிரமாகவே முடிக்கப்பட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கணவரின் தம்பிகளுக்காக 15 வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ளாத தனம் கருத்தரிக்கிறார். தனத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. லட்சுமி அம்மா மறைவுக்கு பிறகு மொத்த குடும்பமும் பழைய நிலைக்கு திரும்பி வர, அந்த நேரத்தில் தனத்திற்கும் குழந்தை பிறக்க சந்தோஷம் டபுள் ஆகியது.

    இந்நிலையில், கண்ணனும் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்த அண்ணன்களுடன் சேர முயற்சி செய்து வருகிறான். இந்நிலையில் திடீரென்று குடும்பத்தில் பழையப்படி சண்டை எட்டி பார்க்க தொடங்கியுள்ளது. அதாவது, தனத்திற்கு பிறந்துள்ள குழந்தை மீதே அனைவரின் கவனமும் செல்ல, கயல் பாப்பாவை யாரும் கவனிக்கவில்லை என மீனாவுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்த எண்ணமே சண்டைக்கும் காரணமாகிறது. இன்றைய எபிசோடில் தனத்தின் அம்மா, மீனாவை வீட்டு வேலை செய்யும் படி கூறுகிறார். வேலை செய்து பழக்கம் இல்லாத மீனா தண்ணி பிடிப்பது, துணி மடித்து வைப்பது, பாத்திரம் கழுவது என சின்ன சின்ன வேலையாக செய்கிறாள். இந்த நேரம் பார்த்து தனமும் அவரின் அம்மாவும் சிரித்து பேச மீனாவின் முகம் மாறுகிறது.

    கடையில் இருக்கும் மூர்த்திக்கு குழந்தை மீதே எண்ணம் செல்கிறது. போதாத குறைக்கு கடைக்கு வந்து செல்பவர்கள் எல்லோருமே குழந்தை பற்றி கேட்க, உடனே குழந்தையை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு வருகிறார் மூர்த்தி. அந்த நேரம் பார்த்து மீனா கயல் பாப்பாவுடன் ஹாலில் இருக்க, எப்போதுமே கயலை தூக்கி கொஞ்சிவிட்டு செல்லும் மூர்த்தி ஏதோ ஞாபகத்தில் அப்படியே செல்ல மீனாவுக்கு அழுகை வந்துவிடுகிறது. தனத்தின் குழந்தை வந்தவுடன் எல்லோரும் கயல் பாப்பாவை மறந்துவிட்டதாக  நினைத்து வருத்தப்படுகிறாள். அதுமட்டுமில்லை தனத்தின் அம்மாவும் இனிமேல்,  தனத்துக்கு கயல் குழந்தையை கவனிக்க நேரம் இருக்காது என குத்தலாக பேச, மீனாவின் பழைய குணம் எட்டி பார்க்க தொடங்குகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: