கடைசி நேரத்தில் முத்துராசு அம்மா கொடுத்த ட்விஸ்ட்... சினிமாவை மிஞ்சும் கிரைம் தொடர் ’நாம் இருவர் நமக்கு இருவர் ’

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்

முத்துராசு கொலையை வைத்து ஒரு மினி கிரைம் நாவலே போடும் அளவிற்கு சஸ்பென்ஸ் உடன் சென்றுகொண்டிருக்கிறது.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சினிமா கிரைம் த்ரில்லரை மீறி சஸ்பென்ஸ் பாணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் எல்லா தரப்பு ஆடியன்ஸ்களையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. சின்னத்திரை அழகன் மிர்சி சரவணன் மாயன் ரோலில் கலக்க, இன்னும் இல்லத்த்ரசிகளின் வீடுகளில் மீனாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி கேரக்டரில் நடித்திருக்கிறார். மாயன் - மகா ஜோடியின் லவ் ரொமான்ஸ் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொடங்கிய நாளிலிருந்து இந்த சீரியல் பீக் டைமில் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கிறது.

    also read சென்னையில் இருந்ததால் தான் எனக்கு இது நடந்தது.... கண்ணான கண்ணே ப்ரீத்தி ஷேரிங்ஸ்!

    மாயன் - மகா திருமணம் தொடங்கி, கத்தி - காயத்ரி திடீர் கல்யாணம், வீட்டை மீட்பது, முத்துராசு ஐஸ்வர்யா ரகசிய திருமணம் என எப்போதுமே பரபரப்பாக ட்விஸ்டுகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் கடந்த 1 மாத காலமாக மிகச் சிறந்த கிரைம் த்ரில்லர் பாணியில் பயணித்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

    சின்னத்திரையில் இதுப்போன்ற கிரைம் ட்விஸ்ட் சீரியல்கள் குறைவு. மிஞ்சி போனால் பேய் வழியில் பயணிப்பார்கள். ஆனால் இந்த தொடர் முத்துராசு கொலையை வைத்து ஒரு மினி கிரைம் நாவலே போடும் அளவிற்கு சஸ்பென்ஸ் உடன் சென்றுகொண்டிருக்கிறது.



    முத்துராசுவை கொன்றது யார்? மாயன் தொடங்கி மகா, காயத்ரி, கத்தி, சரண்யா, ஐஸ்வர்யா, முத்துராசு அப்பா என போலீஸின் சந்தேக பார்வை விரிந்து நேற்றைய எபிசோட்டில் முத்துராசு உடல் கிடைத்து விட்டது. அதை ஐஸ்வர்யா உறுதிப்படுத்தினார். இந்த நேரத்தில் மாயன் மொத்த குடும்பத்தையும் தனியாக அழைத்து சென்று ஒவ்வொருவரிடமும் உண்மையை வாங்க முயற்சிக்கிறான். அப்போது சரண்யா, காயத்ரி துப்பாக்கியால் முத்துராசுவை சுட்டது போல் காட்சிகள் காட்டப்பட்டன. அது உண்மையா இல்லையா? என்பது இன்று தெரிந்து விடும். இந்த நேரத்தில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் 2 வது ப்ரமோவை வெளியிட்டடுள்ள விஜய் டிவி அடுத்த ட்விஸ்டை அவிழ்த்துள்ளது.

    முத்துராசு உடலைப் பார்த்த அவரின் அம்மா வடிவு, அது முத்துராசு இல்லை என கூறுகிறார். இது என்னடா புது ட்விஸ்ட் என்பது போல் மொத்த ஆடியன்ஸூம் குழம்பி போயுள்ளனர்.
    Published by:Sreeja Sreeja
    First published: