• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வேலையை ஆரம்பித்த மீனா...மூர்த்தியிடம் போட்டுக் கொடுத்த முல்லை!

வேலையை ஆரம்பித்த மீனா...மூர்த்தியிடம் போட்டுக் கொடுத்த முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஜீவா மீனாவை திட்ட மூர்த்தி மீனாவுக்கு பதில் சொல்லி பிரச்சனையை முடிக்கிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை மூர்த்தியிடம் போட்டு கொடுக்கிறார் முல்லை. இதனால் மூர்த்தியின் கோபத்திற்கு மீனா ஆளாகிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவின் மறைவுக்கு பின் பல திருப்பங்களை சந்தித்தது.
    கடந்த சில மாதங்களாக கதையோட்டம் மொத்தமாக கண்ணன் ஐஸ்வர்யாவை நோக்கியே நகர்ந்து வருகிறது. அண்ணன்களின் வாக்கே தெய்வ வாக்கு என வாழ்ந்து வந்த கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு மாறிவிட்டான்.  எல்லாம் காதல் படுத்தும்பாடுதான். இந்த காதல் திருமணத்தால் லட்சுமி அம்மா இறந்து போக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மூர்த்தி , கண்ணன் மீது கோபப்பட்டு அவனை விலக்கி வைக்கிறார். இந்த விரிசலை பெரிதுப்படுத்த கஸ்தூரி அத்தாச்சி கண்ணன் - ஐஸ்வர்யாவை மூர்த்தி வீட்டுக்கு எதிரே குடி வைக்கிறார். ஆனால் கண்ணன் எதிர் வீட்டுக்கு வந்த பின்பு இங்கு நடப்பதோ வேறு. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் குடும்பத்துடன் நெருக்கம் ஆகிறார்கள்.

    இதை புரிந்து கொண்ட மீனா, ஐஸ்வர்யாவுடன் சகஜமாக பேச தொடங்கிறாள். அப்படி தான் நேற்றைய தினம் ஐஸ்வர்யாவுடம் மீனா பேசியதை முல்லை பார்த்துவிட வீட்டில் சண்டை வெடிக்கிறது. இந்த சண்டையை கதிர் எப்படியோ சமாதானம் செய்து வைக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அந்த சண்டை மூர்த்தியின் காதுக்கு போய் விடுகிறது. புதிய கடை கட்டுவது குறித்து மூர்த்தி குடும்பத்துடன் பேசி கொண்டிருக்க, மீனா ஆர்வ கோளாறில் பாண்டியன் ஸ்டோர்ஸ், வீடு யார் பெயரில் இருக்கிறது என கேட்கிறார். இதனால் ஜீவா மீனாவை திட்ட மூர்த்தி மீனாவுக்கு பதில் சொல்லி பிரச்சனையை முடிக்கிறார்.

    இது போதாத குறைக்கு, முல்லை இதுதான் சாக்கு என்று மூர்த்தியிடம் மீனா ஐஸ்வர்யாவுடன் பேசியதை போட்டு கொடுக்கிறார். இதனால் கோபமாகும் மூர்த்தியை,ம் மீனா ஏதோ சொல்லி சமாளிக்கிறார். முதல்முறை என்பதால் மூர்த்தியும் மீனாவை மன்னித்து விடுகிறார். இது இப்படி இருக்க, புதிய கடைக்கு பூஜை போடப்படுகிறது. 3 அண்ணன் தம்பிகளும் ஹோமத்தில் உட்கார்ந்து பூஜை போடுகின்றனர். இந்த நாளை கொண்டாடும் வகையில் தனம் வீட்டில் பாயாசம் செய்கிறார். இந்த பாயசத்தை கண்ணனுக்கு கொடுக்கும்படி முல்லையிடம் சொல்கிறார். கண்ணன் வீட்டுக்கு போகும் முல்லை பாயசத்தை கண்ணனிடம் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி வருகிறார். இந்த பக்கம் மீனாவும் ஜீவாவும் கயல் பாப்பாவுக்கு ஊசி போட மருத்துவமனை செல்கின்றனர். வீட்டில் தனம் மட்டுமே தனியாக இருக்கிறார்.

    வயசானாலும் என் முடி கொட்டாமல் இருக்க காரணம் அரிசி தண்ணீர்.. ரகசியம் சொல்லும் லட்சுமி அம்மா!

    இந்த நேரத்தில் தான் தனத்திற்கு பிரசவ வலி வர, கண்ணன் வந்து உதவி செய்கிறான். வரும் திங்கட்கிழமை இந்த எபிசோடு ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: